கதை…
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகன் படிப்புக்காக தங்கள் நிலத்தை விற்று ₹7 லட்சம் சேர்த்து வருகின்றனர்.. அப்போது இவர்களை பார்த்து உதவிக்காக அழைக்கும் ஒரு போலீஸ்காரர் இவர்களிடம் இருக்கும் ₹ 7 லட்சத்தை அறிந்து கொள்கிறார்.. இதனை அடுத்து அந்த தந்தையை கொன்று பணத்தை கொள்ளை அடித்து விடுகிறார் ..
இதனால் அந்த குடும்பம் நீதி கேட்டு அலைகின்றனர்.. ஆனால் காவலர்களே துரோகம் செய்துவிட்டதால் வேறு வழி இன்றி ரவுடி கும்பல் லோகேஷ் குழுவை அணுகுகின்றனர்..
அதன் பிறகு என்ன நடந்தது.? லோகேஷ் அவர்களுக்கு எப்படி உதவினார் காவலர்களை எதிர்த்து எப்படி போராடினார் என்பதெல்லாம் கதை..
நடிகர்கள்…
• லோகேஷ் கனகராஜ் – தேவதாஸ்
• வாமிகா கபி – சந்திரா
• சஞ்சனா ஏ.கே. – பார்வதி
• கஸ்தூரி ராஜா – மோட்டார் மணி
• தலைவாசல் விஜய் – அரசு
• கிரிஷ் தயால் – போஜ்ராஜ்
• அவினாஷ் ரகுதேவன் – கிட்டி
• ஜவஹர் சக்தி – கருப்பன்
• ஷரத் ரவி – சுன்னிலால்
• பிரணவ் தியோஃபைன் – செபாஸ்டியன்
• ஏ. ராஜரிஷி – சிங்காரம்
• பாலாஜி தேவிபிரசாத் – அஷ்ரப்
• அட்டுல் – ராஜரிஷி
• மனோஜ் சஷி – மனோஜ்
• கலையரசன் ஆர். – ராஜா மாணிக்கம்
• ஃபிராங்க்ளின் ஜேக்கப் – ஃபிராங்கி
• திலீபன் கே. – திலீப்
• கர்ணா ராஜா – டிஜிபி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.. கார்த்தி விஜய் கமல் ரஜினி என சூப்பர் ஹீரோக்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.. ஆக்சன் அவதாரம் என்றும் கூட சொல்லலாம்..
கலைந்த சுருட்டை தலை முடி அழுக்கான உடை என எந்த பில்டப்பும் இல்லாமல் எதார்த்தமான ஒரு ரவுடியாகவே பிரதிபலிக்கிறார்.. தேவதாஸ் கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.. அதுபோல நாயகியாக வரும் வாமிகா கபி அவரும் கேரக்டருக்கு செம ஸ்கோர் செய்து இருக்கிறார்… நிறைய அழகி கொஞ்ச ஆக்சன் என இரண்டிலும் அதிரடி காட்டியிருக்கிறார்..
கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கொள்ளை கொள்கிறார் சஞ்சனா.. உறவுகள் தொடர்கதை பாடலை பாடி ஈர்த்திருக்கிறார்..
லோகேஷன் தந்தையாக கஸ்தூரிராஜா.. மோட்டார் மணி கேரக்டரில் ஒரு சாதாரண மெக்கானிக் போலவே காணப்படுகிறார்..
லோகேஷன் நண்பர்களாக வரும் கிட்டி செபாஸ்டின் கருப்பு உள்ளிட்ட அனைவரும் சிறப்பு.. காவல் அதிகாரிகள் அனைவருமே நடிப்பில் கம்பீரம்..
சரத் ரவி கேரக்டர் சீரியஸ் படத்திற்கு கொஞ்சம் காமெடி செய்து சுன்னிலால் கேரக்டருக்கு (சூடு) ஏத்தி இருக்கிறார்..
தொழில்நுட்பக் குழு …
• இயக்கம்: அருண் மாதேஸ்வரன்
• தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
• இசை: அனிருத்
• ஒளிப்பதிவு: முகேஷ் ஜி
• படத்தொகுப்பு: ஜி. கே. பிரசன்னா
• சண்டைப் பயிற்சி: பி.சி. ஸ்டண்ட்ஸ்
• ஆடை வடிவமைப்பு: அருண் மாதேஸ்வரன்
• ஆடை அலங்காரம்: பெருமாள் செல்வம்
• மக்கள் தொடர்பு (PRO): ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
முகேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா எடிட்டிங் செய்து இருக்கிறார்.. படத்தை இரண்டு மணி நேரம் 23 நிமிடங்களில் முடித்து இருக்கிறார்கள்.. எனவே படத்தைப் பார்க்கும்போது எந்தவிதமான அயற்ச்சியும் ஏற்படவில்லை..
முகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல் என்பதை விட ரத்தம். முழுக்க முழுக்க சிவப்பு மையம்..
லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் வன்முறை போதை அதிகம் காணப்படும்.. இப்போது அவரே ஹீரோவாகி விட்டதால் அதற்கும் பஞ்சமில்லை.. படம் முழுக்க துப்பாக்கி குண்டு சத்தம்.. நாட்டு வெடிகுண்டு ஏகப்பட்ட துப்பாக்கிகள் என ரத்த களறி மையம் தான்.. லோகேஷ் வைத்து ரத்த வெறியாட்டம் ஆடி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்..
சாணிகாயிதம் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன்.. இதில் லோகேஷிற்கு ஆக்சன் அவதாரம் கொடுத்திருக்கிறார்.. ஆக்சன் படத்திற்கு ரொமான்ஸ் கொஞ்சம் போதும் என இரண்டு ஹீரோயின்களை வைத்து கொஞ்சம் மட்டுமே ரொமான்ஸ் கூட்டி இருக்கிறார்..
அருண் மாதேஸ்வரன் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அனிருத் இல்லாமல் இருந்தால் சரி வருமா? அனிருத் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. ஏகப்பட்ட பாடல்களை கதையின் ஓட்டத்துடன் இணைத்து இருக்கிறார்..
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.. ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ப அதிரடி இசையில் மிரட்டி இருக்கிறார் அனிருத்..
