ஊர்வசி இவரது மகள் நயன்தாரா ஒரு போலீஸ்.. இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது, அதில் மைலாஞ்சி என்ற கிராமத்திற்கு நீ செல்ல வேண்டும் என அந்த அமானுஷ்ய சக்தி சொல்கிறது..
ஒரு கட்டத்தில் நயன்தாராவும் அந்த மைலாஞ்சி கிராமத்திற்கு சென்ற பிறகு அங்கு 2000 வருடங்களுக்கு பழமையாக இருந்த மறைக்கப்பட்ட ஒரு கோயிலை கண்டுபிடிக்கிறார்..
அப்போது நயன்தாராவை இந்த ஜென்மத்தில் பழிவாங்க 2000 வருடங்களுக்கு முன்பு மறைந்த ரெஜினா உயிர்த்தெழுந்து வருகிறார்.. அவருடன் அவரது காதலனும் இந்நாள் அரசியல்வாதிமான துனியா விஜயம் வருகிறார்..
இதனையடுத்து அவர்களின் பழிவாங்கலை நயன்தாரா எப்படி எதிர்கொண்டார்.? அவர்களுக்கும் நயன்தாராவுக்கும் என்ன பகை.? என்பதெல்லாம் அதிரடியான பக்தி பரவசமான திரைக்கதை..
நடிகர்கள்…
அம்மனாக நயன்தாரா… வில்லியாக ரெஜினா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.. பக்தி பரவசத்தில் நம்மையும் அம்மனாக ஆட வைக்கிறார் நயன்தாரா..
கவர்ச்சியான வில்லியாக கலக்கியிருக்கிறார் ரெஜினா.. இவரது ஆசை காதலனாக நடிகர் துனியா விஜய் மிரட்டி இருக்கிறார்… ஆனால் பழைய வில்லன் டைப் ஸ்டைலில் வருகிறார்..
ஊர்வசி, யோகி பாபு, வெங்கட் ராகவன், மைனா நந்தினி, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோரும் உண்டு.. ஆனால் இவர்களுக்கு பெரிய ஸ்கோப் இல்லை..
கேமியோ ரோலில் அம்மன் வந்து தரிசனம் தருகிறார்கள் குஷ்பூ மற்றும் சினேகா.. சுந்தர் படம் என்றால் குஷ்புவின் ஆட்டம் இல்லாமல் இருக்குமா.? அம்மனாக ஆடி பரவசப்படுத்துகிறார்..
தொழில்நுட்ப குழு…
ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்.. மைலாஞ்சி கிராமத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார்..
ஜாலியான படங்களுக்கு இசையமைத்து வந்த ஹிப் ஹாப் ஆதி இந்த படத்தில் முழுவதுமாக அம்மனுக்கு தாளம் போட்டு இருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் அம்மனையும் பக்தர்களையும் ஆட வைத்திருக்கிறார்.. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார் ஹிப் ஹாப் ஆதி..
படத்தொகுப்பாளர் ஃபேனி ஆலிவர்.. கொஞ்சம் எடிட்டிங் செய்திருக்கலாம்..
கமர்சியல் டைரக்டர் சுந்தர் சி. இயக்கி இருக்கிறார்.. நட்சத்திர பட்டாளங்களை பெரும்பாலும் பயன்படுத்தி ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார்.. முக்கியமாக அம்மனை பற்றிய காட்சி 2000 வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை இப்படியாக பல கதைகளை சொல்லி இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் கொஞ்சம் குழப்பம் உண்டு..

