இராமாயணம் விமர்சனம் 4.75/5

அரசன் தசரதன் தன் மனைவிகளில் ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற ராமனுக்கு முடிசூடாமல் பரதனை மன்னனாக முடிசூடும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனை அடுத்து பரதனின் தாய் ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் இருக்க சொல்கிறார்.. எனவே ராமன் உடன் அவரது மனைவி சீதா மற்றும் ராமனின் சகோதரன் லட்சுமணனும் வனவாசம் செல்கின்றனர்… அவர்கள் அங்கு சந்தித்த இன்னல்கள் என்ன என்பதை உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் கதையை திரைக்கதையாக மிக பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் கொடுத்துள்ளனர்.. 3டி முறையில் ரசிகர்கள் கண்டு மகிழும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி.. ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.. நடிகர்கள்…. ராமன் கேரக்டரில் ரன்வீர் கபூர்… சீதை கேரக்டரில் சாய் பல்லவி… ராவணன் கேரக்டரில் யஸ்…

Read More

சீன் விமர்சனம் 4.5/5.. சூர்யாவின் அதிரடி பெர்பார்மன்ஸ்

சைபர் கிரைம் போலீசில் வேலை பார்க்கிறார் சூர்யா… ஒரு கட்டத்தில் இவருக்கு கண் பார்வை மெல்ல மெல்ல குறைந்து வரவே வேலையை விட நினைக்கிறார்… ஆனால் தன் கண் பார்வை தான் காரணம் என்று தெரியக்கூடாது என பல பிரச்சினைகளை தான் பணிபுரியும் துறைக்கே கொடுக்கிறார்.. ஆனாலும் இவரின் திறமையால் இவரை வேலையில் விட்டு பணி நீக்கம் செய்யாமல் இருக்கிறார் லால்… ஒரு கட்டத்தில் இவர் சிறை பிடித்த சைக்கோ கில்லர் பாணியில் மீண்டும் வெளியில் கொலைகள் நடக்கிறது… அப்படி என்றால் அந்த கொலைகாரன் யார் என்பதை தேட நினைக்கிறார். ஆனால் இவரின் கண் பார்வை முழுவதுமாக மறைந்து விட்ட நிலையில் அந்த குற்றவாளியை கண்டுபிடித்தாரா சூர்யா.? என்பதெல்லாம் வித்தியாசமான கதை.. நடிகர்கள்… மாஸ் காட்டி மிரட்டும் ஹீரோக்கள் மத்தியில் கதைக்கு என்ன தேவையே அதை உணர்ந்து…

Read More

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி விமர்சனம்

ஊர்வசி இவரது மகள் நயன்தாரா ஒரு போலீஸ்.. இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது, அதில் மைலாஞ்சி என்ற கிராமத்திற்கு நீ செல்ல வேண்டும்  என அந்த அமானுஷ்ய சக்தி சொல்கிறது.. ஒரு கட்டத்தில் நயன்தாராவும் அந்த மைலாஞ்சி கிராமத்திற்கு சென்ற பிறகு அங்கு 2000 வருடங்களுக்கு பழமையாக இருந்த மறைக்கப்பட்ட ஒரு கோயிலை கண்டுபிடிக்கிறார்.. அப்போது நயன்தாராவை இந்த ஜென்மத்தில் பழிவாங்க 2000 வருடங்களுக்கு முன்பு மறைந்த ரெஜினா உயிர்த்தெழுந்து வருகிறார்.. அவருடன் அவரது காதலனும் இந்நாள் அரசியல்வாதிமான துனியா விஜயம் வருகிறார்.. இதனையடுத்து அவர்களின் பழிவாங்கலை நயன்தாரா எப்படி எதிர்கொண்டார்.? அவர்களுக்கும் நயன்தாராவுக்கும் என்ன பகை.? என்பதெல்லாம் அதிரடியான பக்தி பரவசமான திரைக்கதை.. நடிகர்கள்… அம்மனாக நயன்தாரா… வில்லியாக ரெஜினா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.. பக்தி பரவசத்தில் நம்மையும் அம்மனாக ஆட…

Read More

ஜெயிலர் 2 திரைப்பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும் மற்றும் தீபாவளி சிறப்பு பரிசு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது .

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி கே எம் தமிழ்குமரன் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் திரு எஸ் கமலக்கண்ணன் அவர்கள், செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பொருளாளர் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இணைச் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேரடியாக சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் ஜெயிலர் 2 திரைப்பட மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, தீபாவளி சிறப்பு பரிசினையும்  வழங்கி வந்தார்கள். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், அவரது வீட்டில் செய்த ஸ்வீட்ஸ்  அனைவருக்கும் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Read More

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

நடிகர்கள் பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய தமிழ் தொடர், ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு எபிசோடுகளுடன் வெளியாகிறது. திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் கணவன், மனைவி, வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் தெரியாத அந்நியர்களைப் போல நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்னவாகும்? இந்தச் சுவாரஸ்யமான கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலுடன் ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய தமிழ் ஒரிஜினல் தொடரான ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடரை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொடர் நவம்பர் 18 ஆம் தேதி முதல் வெளியாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு புதிய எபிசோடுகள் வெளியாகும். கார்ப்பரேட் அலுவலகப் பின்னணியில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் போராடும் இளம் தம்பதியான அறிவு மற்றும்…

Read More

நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வுடனும் தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் திரு. விஜய் சேதுபதி, திரு. அஜித்குமார் ரவீந்திரன், திரு. சிவாஜி பிரபாகர் மற்றும் திரு. ஜெய் பாலா ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர். இந்நிகழ்ச்சி விஜய் சேதுபதி நற்பணி மன்றம், வள்ளலார் வேலைவாய்ப்புச் சேவை இயக்கம் (VVVSI Trust), நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. **200 முதியோர்கள் மற்றும்…

Read More

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’ எனும் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலின் மூலம், ஒரு ராஜாவைப் போல் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை உலகிற்கு அவர் காட்டியிருக்கிறார். காதல் – அதிரடி – அவரது மிரட்டலான, திகிலூட்டும் பாணி ஆகியவை கலந்த இந்தப் பாடலில் தீபிகா படுகோனும் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்தப் பாடலில் அர்ஜித் சிங் (Arijit Singh) மற்றும் எட் ஷீரன் (Ed Sheeran) ஆகியோரின் உலகளாவிய இசைப் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளது. ஷாருக்கானின் ரசிகர்களுக்கு இதைவிட ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் விரைவில் வெளியாகவுள்ள அதிரடித் திரைப்படமான ‘கிங் – KING’ படத்தின் முதல் பாடலான ‘தூ மில்…

Read More

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்! இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநரும் திரைப்படத்  தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாட்டிக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டதை நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி இழப்பால் எதிர்கொள்ளும் சிரமங்களை தன்னால் உணர முடிவதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்களை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை அதிக அளவில்…

Read More

நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் – ‘சிறை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் பஸில் ஜோசப், எல். கே. அக்ஷய் குமார், ஜான் விஜய்,  ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளைப் பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பி. எஸ். ஹரிஹரன் பணியாற்றியிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெயினராகத் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை செவன்…

Read More