எஸ்.எஸ். சமீர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தனது ஸ்டைலான நடிப்பு, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஜே.டி. சக்கரவர்த்தியும் தனது தனித்துவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். இருவரும் இணைந்து திரையில் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு இப்படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
குட்டி ராதிகா, அர்ச்சனா கௌதம், சோனி சரிஷ்டா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராம் ஜெகன், கே. விஸ்வநாத், அசோக் குமார், ஆபித் பூஷண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மும்பை, பெங்களூரு மற்றும் பாங்காக் போன்ற நகரங்களில் விலை உயர்ந்த கார்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் சிறப்பைச் சேர்க்கின்றன.
DSR Films, Mobeen Production மற்றும் SAMEER Productions ஆகிய நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் இப்படத்தை M.D. சலார் பேக் தயாரித்துள்ளார்.இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பி. சுபாஷினி ரெட்டி பணியாற்றியுள்ளார்.
அமீர்லால் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுபாஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சைமன் கே. கிங் அமைத்துள்ளார். பிரபு மற்றும் நாகராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். நடன இயக்கத்தை அம்மா ராஜசேகர் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை கிக்காஸ் காளி அமைத்துள்ளார். இணை இயக்குநராக பி. சேதுபதி பணியாற்றியுள்ளார்.
பிரம்மாண்டமான தயாரிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, அர்ஜுன் – ஜே.டி. சக்கரவர்த்தியின் வலுவான நடிப்பு என ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ள ‘BANG’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

