பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். தற்போது மஸ்காரா, மக்காயலா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் பிரியன் நடிப்பில் ‘வெகுளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘வெகுளி’ (VEGULI) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை, மிரட்டலான புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பாடலாசிரியர் பிரியன் நடித்த ‘அரணம்’ திரைப்படத்தைத் தயாரித்த தமிழ்த் திரைக்கூடம் நிறுவனம் இப்படத்தையும் தயாரித்துள்ளது. வேதா பிலிம்ஸ் சார்பில் விஜயா சரவணன் (VIJAYA SHARAVANAN) இணை தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் இசாக் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் திவ்யா சந்திரன், பாய்ஸ் மணிகண்டன்,…

Read More

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா கவனித்திருக்கிறார். ஜாம்பி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி…

Read More

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஜே.டி. சக்கரவர்த்தி இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘BANG’ விரைவில் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

எஸ்.எஸ். சமீர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தனது ஸ்டைலான நடிப்பு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஜே.டி. சக்கரவர்த்தியும் தனது தனித்துவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். இருவரும் இணைந்து திரையில் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு இப்படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக அமைந்துள்ளது. குட்டி ராதிகா, அர்ச்சனா கௌதம், சோனி சரிஷ்டா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராம் ஜெகன், கே. விஸ்வநாத், அசோக் குமார், ஆபித் பூஷண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை, பெங்களூரு மற்றும் பாங்காக் போன்ற நகரங்களில் விலை உயர்ந்த கார்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் சிறப்பைச் சேர்க்கின்றன. DSR Films, Mobeen Production மற்றும் SAMEER Productions ஆகிய நிறுவனங்கள் சார்பில்…

Read More