அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்’ திரைப்படம் செப்டம்பர் 25 முதல் இன்ஃபினிட்டி விஷன் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது!

மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்’ திரைப்படம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில், வரும் செப்டம்பர் 25, 2026 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் எனும் புதிய பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் (PLF) திரையரங்குகளிலும் வெளியாகிறது. பெரிய திரைகள், அதிக ஒளிர்வுடன் கூடிய காட்சிகள் மற்றும் சிறப்பான ஒலி அனுபவம் என ரசிகர்களுக்கு மிகச் சிறந்த சினிமா அனுபவத்தை இந்த இன்ஃபினிட்டி விஷன் வழங்குகிறது. சாதனைகளைப் படைத்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை மீண்டும் ஒருமுறை திரையில் காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின்…

Read More

குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகாவின் ’ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் முதல் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட பரபரப்பான விசாரணைக் கதையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் பான் இந்தியன் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லரான ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆபத்தான ஒரு பணியின் பின்னணியில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களின் அறிமுகம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். விசாரணையும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும் பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் மையக்கருவை சுற்றி…

Read More

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரை ஆளுமை பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டீசர், படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வையை வழங்குவதோடு, கதையின் மையமாக இருக்கும் தந்தை – மகன் உறவு குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டீசர் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், அதன் உணர்வுப்பூர்வமான களத்தையும், முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்பையும் மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சமூக…

Read More