இந்தியாவின் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதிக்கான போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார்.…

Read More

அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்… கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது. தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான…

Read More

40 நாட்களில் சாதித்த ‘தகப்பன்’ படக்குழு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு !

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்.., படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை…

Read More