தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அசோக் செல்வன் அவரது நடிப்பில் எமக்கு தொழில் ரொமான்ஸ். மற்றும் நடிகை அவந்திகா , ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார்.
அசோக் செல்வனின் நடிப்பும், அவந்திகா மிஷ்ராவுடனான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக செயல்படுகின்றன. ஆனால், பொதுவாக கதை சிக்கல்களையும், திருப்புமுனைகளையும் சரியாக அமைத்திருந்தால், படம் இன்னும் ரசிக்கப்பட வாய்ப்பு மேலும் உள்ளது.
அசோக் செல்வன் ஒரு ஜாலியான ரொமான்டிக் பையனாக மனதைக் கவருகிறார்.
அவந்திகா மிஷ்ராவுடனான காதல் காட்சிகள் ரொமான்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது.
ஊர்வசி, அழகு பெருமாள் , எம்.எஸ் பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த குணசித்திரங்களை கொடுத்து இருக்கின்றனர். அனைவரின் நடிப்பும் சிறப்பு.
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
பாலாஜி கேசவனின் இயக்கத்தில் வழக்கமான காதல் மற்றும் காமெடி கலந்த கதை சொல்லி இருக்கிறார்.
இந்த படம், ஒரு மிதமான ரொமான்டிக் காமெடி என பார்க்க முடியும். வழக்கமான கட்டமைப்புகளுடன் எளிய கதைகளைக் கொண்ட படங்களை விரும்புபவர்கள் இதனை ரசிக்கலாம்.
திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.