துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர், தொடக்கத்தில் குறும்படமாக திகில் கதைகளுடன் வெளியானது. தற்போது பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடையும் சினிமா ஆந்தாலஜி தொடராக வெளியாகிறது. மூன்றாவது சீசனில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இணைந்ததுடன், உளவியல் ஜானரில் கதைக்களமும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள நான்காவது சீசனில் அப்துல் ரொசக், இப்ராஹிம் அல் சமாதி, ஜெனோபர் பாத்திமா மற்றும் ‘சாய் வித் அகமது’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அகமது அல் மர்சூகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரை அப்ரா பர்ஹானா மற்றும் ஜெனோபர் பாத்திமா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஊடகத்துறையினர் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் கலந்துகொண்ட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், பாலிவுட் நடிகர் சோஹைல் கான்…

Read More

தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படமாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்; மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம், தென் தமிழகத்தின் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியில் உருவாகும் வாழ்க்கை மாற்றங்களைப் படம்பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை விரிவாகவும் நெருக்கமாகவும்…

Read More

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு கொடுத்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ படத்தில் தனது நடிப்புக்குக் கிடைத்துவரும் பாராட்டுகளால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஒரு கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்பதைத் தாண்டி, தனது பணியை மக்கள் கவனித்துப் பாராட்டுவதுடன் கொண்டாடவும் செய்கிறார்கள் என்ற உணர்வையும் நீண்ட காலம் அவர் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் இந்தப் படம் அவருக்கு கொடுத்துள்ளது. இதுபற்றி ஜீவா சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அது இப்போது நடந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு…

Read More