நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

நடிகர்கள் ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான ‘ராமாயணா’, தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 20) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய டிக்கெட் புக்கிங் தளங்களிலும் முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 5 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தைப் பிரம்மாண்டமான திரையில் காண விரும்பும் ரசிகர்கள், ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான படைப்புக் குழுவினரை ஒன்றிணைத்து, காலத்தால் அழியாத ராமாயணக் கதையை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம்…

Read More

நடிகர்களே… ‘லோன் வாங்கி, கார் வாங்காதீங்க’!

—நடிகர் அப்புக்குட்டி “பண்டமாற்று” குறும்பட விழாவில் பேசிய அப்புக்குட்டி, இந்த படத்தின் கதை வட்டிக்கு பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது. அதனால் வரும் பிரச்சினைகளை சொல்கிறது. நானும் எனது காரை அடமானம் வைத்து, அவதிப்பட்டு உள்ளேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் இல்லை. 10 சதவீதம் நடிகர்கள் தான் வசதியாக இருக்கிறார்கள். அதனால் நடிகர்களே, லோன் வாங்கி கார் வாங்காதீங்க! ஒரு மாதம் வருமானம் வரும். பல மாதங்கள் வருமானம் வராது. மாட்டிக்கிவீங்க. எனது அனுபவத்தில் சொல்கிறேன் என்று பேசினார் அப்புக்குட்டி. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ராசி அழகப்பன், நடிகர் அப்புக்குட்டி, நடிகர் காதல் சுகுமார், இயக்குநர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துக் கொண்டனர். புஷ்வானம் டாக்கீஸ் சார்பில், கண்ணன் சாவித்திரி கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் “பண்டமாற்று”. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பாண்டி அருணாசலம்,…

Read More

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் ‘418’!

பிரசாந்த் நீல் வழங்க, ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ‘418’ திரைப்படம், அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இந்த ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் நடித்துள்ளனர். பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களைத் தயாரித்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழ் ரசிகர்களுடனான தனது தொடர்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. வலுவான கதைக்களம், சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் திரையரங்குகளில் ரசிக்கக்கூடிய அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்நிறுவனம், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில்,…

Read More