ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர்…

Read More

தனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் கொடுத்து விழாவிற்கு அழைப்பு விடுத்து வருகிறார் எல்.கே. சுதீஷ் MP

தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்சபா எம் பி யும், திரைப்பட தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் MP மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் தம்பதிகளின் மூத்த மகள் டாக்டர். ஜானு ஸ்ரீ சுதீஷ்க்கும் , ஓசூர் சேர்ந்த தொழிலதிபர் துட்டுகுறி ரவிக்குமார் மற்றும் ராதாரவிக்குமார் ஆகியோரின் மகனான அகில் ரவிக்குமாருக்கும் வரும் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் ஞாயிறு காலை 8.30 am மணி முதல் 10 am மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.. நவம்பர் 21ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

Read More

மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்… அடுத்ததாகத் திரைப்படத் தயாரிப்பு! திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!

விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்குத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் முக்கிய OTT தளங்களுடன் இணைந்து சீரிஸ்கள் மற்றும் குறுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறந்த படைப்புகளாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தயாரிப்புப் பணிகளை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் பல படைப்புகளை உருவாக்கும் வகையில் தனது குழுவையும் விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஹன்சா என்டர்டெயின்மென்ட் இயக்குநர் ஸ்ருதி சுவாமி கூறுகையில், “பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலம் என்பது படைப்பாற்றல், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைவதில்…

Read More