அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) – பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜான் டோ – John Doe’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் ‘ஜான் டோ- John Doe’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 ( Artist 404) எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது.…
Read MoreDay: October 23, 2026
அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’
மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம். மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம்…
Read Moreபெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே ‘எல்லோரும் சமம்’ என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் ‘Always Choose Kindness’ என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவில், குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார…
Read More