ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், ராமர் மற்றும் சீதையின் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகள் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறது. பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள், கம்பீரமான அரண்மனைப் பின்னணிகள், ராமர், சீதையின் திருமணக் காட்சிகள் எனப் பல அழகான தருணங்கள் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ‘மங்கள வண்ணமே’ பாடல் தற்போது வேர்ல்ட் ஆஃப் ராமாயணா மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடலைக் கேட்கலாம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அரண்மனையின் பிரம்மாண்டம், புனிதமான திருமண நிகழ்வுகள், அயோத்திக்கு வெளியே அவர்களது…

Read More