இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் ‘ஜென்டில்மேன்’. மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்டமாக முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த மறு வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளனர். 1993-ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், S.ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படைப்பாகும்; இவரது திரைக்கதை, பிரமாண்ட காட்சி அமைப்பு, பாடல்களை உருவாக்கிய விதம் என்று இப்படம் ஷங்கருக்கு சினிமாவில் தனி இடத்தை கொடுத்தது. இதன் மூலம் தனது பாணியில் கலைஞர்களை உருவாக்க முடியும் என்று நிரூபுத்து காட்டியவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். 800க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்த அனுபவங்கள்…
Read More