மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ திரையுலக ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ‘பாம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்ற ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தையும், ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ இணையத் தொடரையும் இயக்கியுள்ளார். புதிய படம் குறித்து இயக்குநர் விஷால் வெங்கட் கூறுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இந்தியாவின் சிறந்த…

Read More

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி, ” இயக்குநர்கள் பேரரசு சார், உதயகுமார் சார் இவர்களது படங்கள் பார்த்துதான் சினிமா மீது ஆர்வமே வந்தது. தனஞ்செயன் சாருடன் பேசும்பொழுது எப்பொழுதுமே ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கும். டி. இமான் எங்கள் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இயக்குநராக என் அம்மா படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். நிச்சயம்…

Read More

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது இரண்டாவது திரைப்படமான ‘டெத் ரயில்வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளை தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை இயக்குகிறார் தரணி ராசேந்திரன். இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை இப்படம் பின்னணியாகக் கொண்டுள்ளது என்பதை கிளிம்ப்ஸ் நமக்கு காட்டுகிறது. இந்தியா தனது சொந்த மண்ணில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், இந்திய வீரர்கள் தொலைதூர எல்லைகளில் அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகம் அறியப்படாத இந்த வரலாற்றுப் பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

Read More

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5!

அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அசல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான போட்டிகள் மூலம் வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் ஹிப்-ஹாப் கலைஞர்களின் திறமைகளைக் கொண்டாடுகிறது. தேசியம், XX 2026: தமிழ் ஹிப்-ஹாப்பின் ஆற்றலையும் வளர்ந்து வரும் இசை வடிவத்தையும் கொண்டாடும் வகையில், தமிழ் ZEE5, ZEE மியூசிக் உடன் இணைந்து ‘தீக்குரல்’ என்ற புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் கலைஞர்களை ஒன்றிணைத்து, அடுத்த தலைமுறை தமிழ் ராப்பின் குரலாக உருவெடுப்பதற்கான போட்டியை இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கிறது. கருப்பொருள் சார்ந்த இசை நிகழ்ச்சிகள், படைப்பாற்றல் சவால்கள், தீவிரமான போட்டிகள் மற்றும் பார்வையாளர்களின் பங்கேற்பு எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தனித்துவம், பாடல் வரிகளின்…

Read More