‘கிங் 100 – King 100’ திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ர.கார்த்திக் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இது அவரது மூன்றாவது திரைப்படமாகும். இப்படத்தில் திறமையான நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. ‘கிங் 100 – King 100’ படக்குழுவினர், இப்படத்தில் ‘கர்ணா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் அவர் ஒரு விதமான தீவிரமான மற்றும் மிரட்டலான தோற்றத்தில் காட்சி தருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அசோக்…
Read MoreDay: November 10, 2026
விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
இந்நிகழ்வினில்.., கலை இயக்குநர் ராஜா பேசியதாவது.. , “இந்தப் படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். என்னுடைய பணியிலும் மூன்று, நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம். குறிப்பாக, இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் மற்றும் அதற்கான அம்சங்களில் நிறைய புதுமைகளைச் சேர்த்திருக்கிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.” ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் பேசியதாவது.. , “இந்தப் படத்தின் விஷுவல் டிபார்ட்மென்ட் எனக்கு அளித்ததற்கு நன்றி. எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவருடனும் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இயக்குநர் எனக்கு மிகவும் இனிமையான மனிதராகத் தெரிந்தார். ஒரு அழகான, மனதுக்கு நெருக்கமான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் இருந்த நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் பணியை…
Read More