ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை, ஆன்மிக மரபை போற்றும் அனிமேஷன் திரைப்படம்! ஆகஸ்ட் 2027-இல் உலகம் முழுவதும் வெளியிடும் இஸ்கான்

ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை, ஆன்மிக மரபை போற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம்! ஆகஸ்ட் 2027-இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு இந்திய திரையுலகில் ‘KGF’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படங்களை வழங்கி, தனித்துவமான கதைகளுக்கும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது ஆன்மிகமும் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் ஒரு புதிய திரைப்பட பயணத்தை முன்னெடுத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் இணைந்து, இஸ்கான் (ISKCON) அமைப்பின் நிறுவனர் ஆச்சார்யரான அவரது தெய்வீக அருள் ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் அசாதாரண வாழ்க்கை, ஆன்மிக பயணம் மற்றும் உலகளாவிய சேவையை போற்றும் வகையில் ‘சரணாகதி – தி லைஃப் ஆஃப் எ சரண்டர்ட் சோல்’ (ŚARANAGATI – The Life of a Surrendered Soul)** என்ற பிரம்மாண்ட…

Read More

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் டத்தோ மாலிக் வழங்கும்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பிரம்மாண்டமான ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி!

மாலிக் ஸ்ட்ரீம்ஸின் டத்தோ மாலிக், இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானுடன் முதன்முறையாக இணைந்து நடத்தும் இந்த பிரம்மாண்டமான அரங்க இசை நிகழ்ச்சியில், 90% தமிழ் பாடல்களும், அவரது மிகப்பெரிய வெற்றிப் பாடல்களில் 10% இந்திப் பாடல்களும் இடம்பெறவுள்ளன! இசை, மெட்டுகள் மற்றும் உணர்வுகளின் அசாதாரண கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள். புகழ்பெற்ற இசையமைப்பாளரும் உலகளாவிய இசை அடையாளமாகத் திகழ்பவருமான ஏ.ஆர். ரஹ்மான், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சியை 2027 ஜூன் 12 அன்று கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற டிஎம் ஸ்டேடியம் நேஷனலில் நடத்தவுள்ளார். மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி, இசை மேதையின் புகழ்பெற்ற இசைப் பயணத்தைக் கொண்டாடும் பிரம்மாண்டமான விழாவாக ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்களை ஒன்றிணைக்க உள்ளது. மாலிக் ஸ்ட்ரீம்ஸின் முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த நிகழ்வு ஏ.ஆர். ரஹ்மானுடன்…

Read More

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான அபய் சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே புதுமையான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருண்ட பின்னணியில் மர்மமான கட்டிடத்தின் சூழலில், அச்சத்துடன் மேலே நோக்கும் தாயும் மகனும் இடம்பெற்றுள்ள போஸ்டர் படத்தின் ஹாரர் பின்னணியையும், கதையில் நிறைந்திருக்கும் மர்மத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள காட்சியமைப்பும், கதாபாத்திரங்களின்…

Read More

நடிகர் மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய் – (Family Boy)’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் திறமையான நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் – Family Boy’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி…

Read More