காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை GenZ தலைமுறைக்கு GenZ பாணியில் சொல்லி இருப்பதே இந்த லவ் மேட்டர் திரைப்படத்தின் கதைக்கரு. இத்திரைப்படத்தில் ‘லுங்கிபாய்ஸ்’ ராஜ்பிரியன் “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் ஒரு பாடல் பாட உள்ளார். இப்படத்தின் ஆரம்பம் ஆரம்பம் என்ற முதல் பாடலை, எஸ்.என்.சுரேந்தர் பாடி உள்ளார். கதை நாயகனாக இயன் அறிமுகமாகிறார். கதை நாயகியாக அபிநயா அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஶ்ரீவி, திலீப் RJ பொற்கொடி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி மாணவரான மகாதாரா…
Read MoreDay: November 12, 2026
பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து ‘இக்னோர் – IGNORE’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘இக்னோர் – IGNORE’ பாடலுக்கு ‘தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை’ (Godfather of Tamil Hip-Hop) என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளதுடன், பாடலுக்கான இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் (Arrangements & Programming) மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளைப் பாடலாசிரியர்…
Read Moreஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக, சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்தின் உலகளாவிய டிரெய்லர் வெளியானது!
இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமான சந்தோஷ் தாவகார் இயக்கிய ‘கோந்தல்’ திரைப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். உளவியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், மர்மம் நிறைந்த காட்சிகள் மற்றும் மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியை டிரெய்லர் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு மராத்தி திரைப்படம் ஏழு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு, உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பது இதுவே முதல்முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம்…
Read Moreகோலாகலமாக நடைபெற்ற ‘பைசாசி’ திரைப்பட துவக்க விழா!
FACEON MEDIYAA (OPC) PVT LTD., நிறுவனம் தயாரிப்பில், குழந்தை முருகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இதிகாச ஃபேண்டஸி திரைப்படம் ‘பைசாசி’. எஸ்.பி.ஆர் என்கிற சுந்தரபாண்டியராஜா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இளம் நடிகைகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆத்ரேயா இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.வி.உதயகுமார் மற்றும் சி.கே.முருகன் பாடல்கள் எழுத, ராஜேஷ்குமார் வசனம் எழுதுகிறார். மணிகண்டன் மற்றும் தாமரை நடனக் காட்சிகளை வடிவமைக்க, விஜய் ராஜான் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சதிஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் துவக்க விழா 11 ஆம் தேதி, 11 ஆம் மாதம், சரியாக 11:11 மணிக்கு, அதாவது 11.11 : 11:11 mints- ல் சென்னை,…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மணி ரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி இதற்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தனர். இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்த முறை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் மனதை வருடும் காதல்…
Read More