திரையரங்குகளில் பார்த்து ரசித்த ஒரு சில திரைப்படங்களின் கதை முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கும். அத்தகைய திரைப்படமான ‘ஹைக்கூ’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 20 அன்று வெளியாகிறது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஹைக்கூ’, இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படங்களில் ஒன்று. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. படம் குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹைக்கூ’ திரைப்படத்துக்கு…
Read MoreDay: November 18, 2026
மார்வெலின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன!
உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியது. இதையடுத்து, படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #OpenDoomsdayBookings என்ற ஹேஷ்டேக் மூலம் வைத்த கோரிக்கையின் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிகாலை 12.01 மணி முதல் இரவு 11.55 மணி வரையில் பல்வேறு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதுடன், சில காட்சிகள் ஏற்கெனவே முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன. முன்பதிவு…
Read More