“கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

ஒரு கனவை நனவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கப் பணம் அவசியமில்லை. சில நேரங்களில் ஒரு யோசனையின் மீது நம்பிக்கை வைத்து, அதைச் செயல்படுத்தும் துணிச்சலும் விடாமுயற்சியும் இருந்தால் போதும். அத்தகைய எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் பீட்சா பாய்ஸ். வாழ்வாதாரத்தைத் தேடி கிராமப்புறத் தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு வரும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர்கள் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு சவால்களை எதிர்கொள்ளும் சூழலையும் இப்படம் பேசுகிறது. நட்பு, லட்சியம், நகைச்சுவை, மனித உணர்வுகள் என அனைத்தையும் கலந்து, அறிமுகமில்லாத நகரத்தில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கப் போராடும் இளைஞர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமான கோணத்தில் இப்படம் எடுத்துரைக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி பெங்களூருவுக்குச் செல்கின்றனர். அங்கு ஒரு பீட்சா உணவகத்தில் பணிபுரியத் தொடங்கும் அவர்களின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது. முதலாளியுடன் ஏற்படும்…

Read More

திக்..திக்..திருப்பங்களோடு மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரைப்படம் ‘வயலெட் கனவு’ நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், குறைந்த முதலீட்டில், அறிமுக இயக்குநர் மற்றும் நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில், கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வயலெட் கனவு’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஹாலிவுட் எழுத்தாளர்களைப் போல் ஒரு திரைப்படத்திற்கு தேவையான சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்புடன் தனது நாவல்களை எழுதக்கூடிய திறன் படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், மிகவும் புகழ்பெற்ற நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டட இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T, திரை மொழியில் பார்வையாளர்கள் மிரளும் வகையில் ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார். அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் D.F.T…

Read More

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் ‘இற இறகாக..’ எனத் தொடங்கும் காதல் பாடலை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. ‘மக்கள் காவலன்’ படத்தில் இடம்பெற்ற ‘இக்னோர்’ (IGNORE) எனும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ படத்திலிருந்து ‘இற இறகாக..’ எனும் இரண்டாவது பாடலை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. பாடலாசிரியர் ஜோதி கண்ணாவின் வரிகளில், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடல், நாயகன் தனது கடினமான உலகத்திலிருந்து விடுபட்டு, காதலியின் (திவ்யா ஸ்ரீ பாதா – இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்)அன்பின் மூலம்…

Read More

23-ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி, கசடதபற, போட்

என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்ட சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 9-வது திரைப்படம் ‘நவோரியா’. டி பி சி ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படமும் காமெடி, ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த ஒரு முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களுக்கும் மேலாகத் திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும்,…

Read More

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிப்பில் உருவாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு, திரைப்படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில்… Drumsticks Productions நிர்வாக இயக்குநர் விவேக் பேசியதாவது, இன்றைய நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் Drumsticks Productions மற்றும் Zee Studios சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில்…

Read More