திரை மற்றும் அரசியல் உலகின் உண்மை சம்பவங்களில் அடிப்படையில் உருவாகியுள்ள‌ பரபரப்பு திரைப்படமான‌ ‘படைப்பாளி’ விரைவில் வெளியாகிறது

‘சென்னை ‍ 28’, ‘பேரழகன்’ உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக‌ விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான‌ பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் ‘படைப்பாளி’.

பாலாஜி ஜெயபாலன் இயக்கும் இத்திரைப்படத்தில் மலேசிய தமிழ் திரையுலகில் 20க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள‌ யுவராஜ் கிருஷ்ணசாமி மற்றும் பாலாஜி ஜெயபாலன் நாயகர்களாக நடிக்கின்றனர். தனது முதல் படத்தை இயக்கும் ஒரு இளைஞனும் ஆணவக் கொலைகள் குறித்த அவனது படைப்பும் திரையுலக மற்றும் நிஜ அரசியலை எதிர்கொள்வதே படத்தின் மையக்கரு. சில உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ள‌து.

கதாநாயகியாக நடிகை சவுந்தரியா அறிமுகமாகும் ‘படைப்பாளி’ திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், ‘காதல் கண்கட்டுதே’ திரைப்படத்தின் இயக்குநர் சிவராஜ், கார்த்திகேயன் கோவிந்தராஜ், பிரசாந் வர்மன், ஏ.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன், பிரியதர்ஷினி, டோமினிக், ஆண்ட்லின், தர்மராஜ், பிரதீப், தயனேஷ், கார்த்திக் மானஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.  பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிய எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார்.

மிதுன் சந்திரன் மற்றும் ரஜேஸ் டி.ஜி. ஆகியோரின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின்  படத்தொகுப்பு பணிகளை ஆஞ்சேஷ் மற்றும் ஆண்டனி பிரிட்டோவும், எஸ்.ஃஎப்.எக்ஸ் பணிகளை ஃஎப்.எக்ஸ் ஸ்டுடியோவும் வி.ஃஎப்.எக்ஸ் பணிகளை சினிஃபைல் ஸ்டுடியோவும் செய்துள்ளனர். குமரகுரு, ராம்ஜி, சக்தி, பிரபு ஆகியோர் இணை இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர்.

‘படைப்பாளி’ குறித்து பேசிய இயக்குநர் பாலாஜி ஜெயபாலன், “வெற்றிப்பட விநியோகஸ்தரான பிரம்மா அன்புராஜ் அவர்களின் முதல் தயாரிப்பை இயக்குவது மகிழ்ச்சி. பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும் வகையில் ‘படைப்பாளி’ உருவாகியுள்ளது,” என்றார்.

‘படைப்பாளி’ திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் பட நிறுவனமான‌ ஏவிஆர் அன்பு சினிமாஸ் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment