வணக்கம்.
நான் இயக்குநர் மீரா கதிரவன். இன்று மாலை 5 மணியளவில் என்னுடைய மூன்றாவது திரைப்படத்தின் முதல் பார்வையை ( *First Look poster* ) நான் மதிக்கும் திரைத்துறையின் முக்கிய ஆளுமைகள் இணைந்து வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தை எனது கனவுப்படம் என்றும் சொல்லலாம். இதுபோன்ற ஒரு படம்தான் எனது முதல் படமாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். எனக்கு இதை சாத்தியப்படுத்த இருபது வருடங்களாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாற்றின் பயணத்திலிருந்து பார்த்தால் நூறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றும் சொல்லலாம். எல்லாப் பாகுபாடுகளையும் கடந்து அன்பையும், மனிதத்தையும் விரும்புகிற பலரின் கனவாகவும் இது இருப்பதால் உங்களுடைய பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.
அன்பிற்குரிய நண்பர்கள் மற்றும் மரியாதைக்குரிய பத்திரிகை, ஊடக நண்பர்கள் தங்கள் வாட்ஸப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் இப்படத்தின் முதல் பார்வையைப் பகிர்ந்து, எல்லோரிடமும் பரவலாக எடுத்துச்செல்வது இந்தக் கனவைச் சாத்தியமாக்குவதில் முக்கியமான பங்களிப்பாக இருக்குமென்று நான் நம்புகிறேன்.
எப்போதும்போல் தங்களின் ஆதரவைத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்பை நோக்கி நகரும் ஒரு புதிய திசைவழிப் பயணத்தில் சக பயணியாக நீங்களும் எங்களுடன் கரம்கோர்த்து வரவேண்டுமென்று விரும்புகிறேன்.
நன்றி!
இயக்குநர் மீரா கதிரவன்
& குழுவினர்