“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லாது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார் லாவண்யா.

செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக திரையிடப்பட்டு பாரட்டுகள் பெற்ற ‘தணல்’ படக்காட்சியில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது.

படம் குறித்து லாவண்யா திரிபாதி பேசியதாவது, ” ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் எனது நடிப்பைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொமாண்டிக் தருணங்களுடன் இயல்பாகவும் இரண்டாம் பாதியில் தீவிரமான எமோஷனல் தருணங்களுடனும் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும். வழக்கமான கதாநாயகி அல்லாது படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கு நன்றி. மிகவும் அர்ப்பணிப்பு கொண்ட நடிகர் அதர்வா முரளியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி” என்றார்.

*நடிகர்கள்:* அதர்வா முரளி, அஸ்வின் காகமனு, லாவண்யா திரிபாதி, ஷா ரா, பாரத், லக்‌ஷ்மி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

Related posts

Leave a Comment