வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்ட கதை வெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜியத்தை குறிக்கும் சூநியங்கள்…. என்கிறார் -வில்லயம் ஷேக்ஸ்பியர்

உலகிலேயே மிகவலிமையானவள் பெண் தான். மாதம் மாதம் தன் உதிரத்தையே பார்க்கும் சக்தி அவளுக்கே உரியது. எல்லோராளும் வேட்டையாடப் படுபவளும் அவள் தான்.

சமையல் அறையில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை.

எவ்வளவு பெரிய புத்திசாலி பெண்ணும் இந்த சமுதாயத்தில், ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஆணால் வேட்டையாடப்பட்டு கொண்டே இருக்கிறாள்.

ஒரு ஆண் தன்னுடைய மகளை தெய்வமாக பார்க்கிறான், அதே ஆண் அதே வயதுடைய வேறு ஒரு பெண்ணை SEX-TOY ஆகவே பார்க்கிறான். பல விதமாக வேட்டையாடப்பட்ட பெண்களின், சமுதாயத்திற்கு எதிரான கோபமே இந்த “முட்டாள் எழுதிய கதை” படம் என்கின்றார் பா.ஆனந்தராஜன்.

இவர், இதற்குமுன் கிச்சி கிச்சி, யுத்தகாண்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பாலா ஜி இராமசாமி மேற்கொள்ள, இசை ஜோகன், எடிட்டிங் வில்சி மற்றும் இணைஇயக்குனர் ரா.பிரதீப் குமார்.

மேலும் இந்த கதையின் நாயகிகளாக ரித்விகா, வினோதினி வைத்யநாதன், ரிஷா ஜகோப்ஸ் மற்றும் மது நடித்துயிருக்கிறார்கள். இவர்களுடன் யோக் ஜபீ, வேலு பிரபாகரன், நாஞ்சில் சம்பத், TSR, மரீனா மைகேல்,KPYயோகி ராஜ், மற்றும் பலர் நடித்து இருகிறார்கள்.

இப்படத்தை எடிசன் திரை ஆலயம் சார்பாக வேணுகோபால் தயாரிக்கிறார்.தயாரிப்பு மேற்பார்வை நம்பி மங்கை. இத்திரைப்படத்தை மக்களின் ஆதரவோடு மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Related posts

Leave a Comment