நடிகர் சத்யராஜை வெளுத்து வாங்கும் இயக்குனர் பேரரசு!

நடிகர்களுக்கு ஒண்ணுமே தெரியாது
வெறும் மண்ணுதான்னா…
நீங்களும் நடிகர்தானே!
உங்களுக்கு என்ன தெரியும்னு கருத்து சொல்ல வர்றீங்க!
எம்ஜிஆர் அவர்கள் இருக்கும் போது இதைச் சொல்ல தைரியம் இருந்ததா?
அந்த நடிகரோட நினைவாக அவர் கொடுத்த கரலா கட்டையை ஏன் இன்னும் வைத்திருக்கீங்க?
நடிகர் கமலுக்கு ஒண்ணும் தெரியாது, அவருக்கு ஏன் எம்பி பதவி கொடுத்தீர்கள் என்று நீங்கள் திமுகவிடம் கேட்டிருக்க வேண்டும்.
கட்சியில் உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது, அவர்களின் மகளுக்கெல்லாம் பதவி கொடுக்காமல் ஒரு நடிகனாகிய சத்யராஜ் மகளுக்கு ஏன் பதவி கொடுத்தீர்கள் என்று நீங்கள் திமுகவிடம் கேட்க வேண்டும்!
Auctionன்னா நடிங்க,
Cutன்னா நடிச்சு முடிச்சுட்டு வீட்டுக்கு போங்க!
எல்லா தொழில் செய்யுறவன்லேயும் அறிவாளி இருக்கான்.
நடிப்பும் ஒரு தொழில்தான். அதுலயும் உலக அறிவு உள்ளவங்க எத்தனையோ பேர் இருக்காங்க!
அவங்களை பகுத்தறிவு உள்ளவர் இழிவு படுத்த மாட்டார்கள்!

–இயக்குனர் பேரரசு

Related posts

Leave a Comment