சக்திவேல் நாகப்பன் (எ) சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடிக்கும் ” ரா ட் ட ” திரைப்படம் வருகிறது!

இந்த படத்தில்
அரசியல் பேசல..
ஆன்மீகம் பேசல …
ஜாதி மதம் பேசல …
வன்முறை பேசல…
மது போதை பீடி சிகரெட்
கலாச்சார சீர் கேட்ட பேசல…
சண்டை சச்சரவை பேசல…
டிஜிட்டல் பேசல…
கைப்பேசி காட்டல…
போலீஸ் அடிதடி பேசல..
துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் பேசல…
ரத்தம் தெறிக்கல…
கொலை கொள்ளை கற்பழிப்பு பேசல….

ஆனால்…
வாழ்வியலை நயம்பட பேசி
தற்போதுள்ள
வாழ்க்கை நெறிமுறையை
யதார்த்தமான
திரைக்கதையில்
காட்டும் திரைப்படம்தான் * “ராட்ட ”
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறும் பொழுது
நான் பேசல…
எங்களின் படம் பேசும்… என்றும்
மேல் கண்ட எந்தவித தவறான பழக்கவழக்கங்களை காட்டாத
இத் திரைப்படத்தை மக்கள் ஆதரவு தர வேண்டும். திரை ரசிகர்களும் மக்களும் ரசித்து கைதட்டி ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ரத்தம் சிந்த வைத்து காட்சியை எடுப்பதை விட , சிந்திக்கும் திறனை வளர்க்கும் நோக்கத்தில் திரைக்கதையை அமைத்து படத்தை ஒரு சிலையை போல் செதுக்கி உள்ளேன்.

எந்தத் தவறையும் காட்டாத திரைப்படங்களுக்கு பெருமளவில் மக்களும், மீடியாக்களும் குரல் கொடுத்து ஆதரிக்க முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்…

இத்திரைப்படத்தை
எப் எம் எஸ் மீடியாஸ்
நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவர இருக்கிறது…

இதில் நாகசக்தி , ஹெலன் ,சித்தா தர்ஷன், சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்ரமணியம் , கிருஷ்ணன் ,சந்திரன், முத்துராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்… இத்திரைப்படத்திற்கு லோகேஷ் எடிட்டிங் செய்ய வெற்றியின் ஒளிப்பதிவில் மணிகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார்… இந்த திரைப்படத்தின் பாடல்களை முன்னனி பாடகர்களான ராஜகணபதி, செண்பகராஜ், அபர்ணா நாராயணன், சபிக் போன்றோர் பாடி இருக்கிறார்கள்… பாடல்களை
சரவண பிரியன் மற்றும் தமிழன் இலையா இருவரும் எழுதியிருக்கிறார்கள்.

கதை திரைக்கதை எழுதி
இயக்கி உள்ளார்…
சக்திவேல் நாகப்பன் (ஏ) *சிவசக்தி பிரபு*

 

Related posts

Leave a Comment