குழந்தைகள் விரும்பும் ஹீரோக்கள் தமிழ்சினிமாவில் மிகவும் குறைவு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என வெகுசிலர் தான் குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் காஞ்சனா சீரிஸ் படங்கள் மூலமாக லாரன்ஸும் இடம் பிடித்து விட்டார். அவரது படங்கள் தொடர்ந்து குழந்தைகளை ஈர்த்து வருகிறது. தற்போது அவர் இடத்தை நோக்கி வருவதற்கான முதல் கல்லைப் போட்டிருக்கிறார் நடிகர் எஸ்.ஜே சூர்யா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல ரீச் ஆகியுள்ளது. எஸ்.ஜே சூர்யாவும், “திரையில் குழந்தைகள் என்னைக் கண்டு மகிழ்வதைப் பார்க்கும் போது உண்மையிலே பெரும் சந்தோஷமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார். அதனால் இனி அவர் குழந்தைகளை கவரும் விதமான படங்களில் அவ்வப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஒருவேளை இந்த மான்ஸ்டர் படம் கூட இரண்டாம் பாகம் வந்தாலும் வரலாம். எப்படி காஞ்சனா சீரிஸ் வந்து கொண்டிருக்கிறதோ அதேபோல் மான்ஸ்டர் சீரிஸும் வரலாம். (வரட்டும் நல்லது தானே)
லாரன்ஸ் இடத்தை நோக்கி எஸ்.ஜே சூர்யா

