தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நடிகர் ராஜ்குமாரின் திருமணம்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில், ”
”திருமங்கலம் கோபால் அவர்களின் மனைவியார் சரோஜினி அவர்கள்
நன்றி உரை ஆற்றுகையில் சில செய்தியினை சொன்னார். அதாவது திருமங்கலம் கோபாலின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது என்று குறிப்பிட்டார். அவரது நான்காவது மகனான ராஜ்குமாரின் திருமணம் என் தலைமையில் நடைபெறுகிறது. இனி அவரது வாரிசுகளுக்கு பேரனோ.. பேத்தியோ.. அவர்களுக்கும் என் தலைமையில் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமை பெற்றவர்கள். அந்த அளவிற்கு எங்கள் மீதும் கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் திருமங்கலம் கோபால் குடும்பத்தினர். திருமங்கலம் கோபால் கட்சிக்காக பாடுபட்டு அரும் தொண்டாற்றியவர். அவர் எப்போதும் மிடுக்காகவே இருப்பார்.

தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் திமுகவின் துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ..ஏறத்தாழ 30 சதவீத அளவிற்கு எனக்கு பாதுகாப்பாக என்னுடன் பயணித்தவர் தான் திருமங்கலம் கோபால்.

மதுரை திருமங்கலம் கோபால் மற்றும் திருமதி சரோஜினி தம்பதியினரின் இளைய வாரிசான ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷகிலா பானு தம்பதியரின் மகள் சஜு என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, டி. ஆர். பாலு, சேகர் பாபு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, திமுகவின் செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி, பாலாஜி தரணிதரன், டெல்லி பிரசாத் தீனதயாள், நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், நடிகை காயத்ரி, இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் சரஸ் காந்த், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்த், இயக்குநர் அமிர்தராஜ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment