ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி அதன் மிகப்பெரிய டெக் கார்னிவல் MECHATHLON ‘23 -ஐ சென்னையில் நடத்தியது

சென்னை, 5 டிசம்பர், 2023: இந்தியாவின் முன்னணி இன்டர்நேஷனல் K12 பள்ளிகளில் ஒன்றான ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி, இன்று தனது மிகப்பெரிய நாடு தழுவிய டெக் கார்னிவல், MECHATHLON 2023 -ஐ நடத்தியது, அதில் இந்தியா முழுவதிலும் உள்ள இப்பள்ளி மாணவர்களின் புத்திசாலித்தனம், புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. புத்தாக்கம் உத்வேகத்தை சந்திக்கும் இடமாக இந்த விழா அமைந்ததால், மாணவர்கள் தங்கள் அறிவின் எல்லைகளைக் கடந்து ஆர்வத்துடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஓர் உன்னதமான தளமாக இது மாறியது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஆர்க்கிட்ஸ் பள்ளிகளில் இந்த விழா நடத்தப்பட்டது.

வகுப்புகள் பள்ளி வளாகம்
4 & 9 மணப்பாக்கம்
4 & 9 பெரும்பாக்கம்

டெக் கார்னிவல் என்னும் இந்த தொழில்நுட்ப திருவிழாவானது பன்முகக் கற்றல் பயணத்தை வழங்கி, மாணவர்களின் சவால்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தவும், அவர்களிடையே ஆர்வத்தையும் சுய உணர்வை வளர்க்கவும், கணித மற்றும் அறிவியல் பாடவியல் கருத்துக்களை பிராக்டிக்கல் என்னும் நடைமுறை அமைப்புகளில் பயன்படுத்தவும் உதவியது. மாணவர்கள் கேஸ் ஸ்டடி போட்டி மற்றும் சுவாரசியமான குவிஸ் என்னும் வினாடி வினா போட்டிகள் மட்டும் இல்லாமல், “ஜூனியர் ஐன்ஸ்டீன் மற்றும் ஆர்யபட்டா மாடல் மேக்கிங்” என பெயரிடப்பட்ட தொடர் போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த டெக் கார்னிவல் விழாவில், மாணவர்கள் உற்சாகத்துடன் தங்களது வொர்க்கிங் மாடல்களை காட்சிப்படுத்தினர், மேலும் இவ்விழா மாணவர்கள் நிஜ உலக சவால்களுக்கு தங்கள் அறிவைப் பயன்படுத்துவதற்கான திறனை வெளிப்படுத்த உதவும் வகையில் அமைந்தது.

ஆர்வமுள்ள இளம் மனங்களின் பங்கேற்பைப் பற்றிப் பேசுகையில், ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் கல்விசார் துறை VP, திரு. ஷ்லோக் ஸ்ரீவத்சவா, “எங்களது OCFP பாடத்திட்டம் மாணவர்களை ஆரம்பகட்ட STEM-க்கு அறிமுகப்படுத்தி, அது கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் மாணவர்களின் அறிவினை வளர்க்க உதவும் மற்றும் அவர்களது  அடித்தள புரிதலை மேம்படுத்த ஊக்குவிக்கும். MECHATHLON 2023 என்பது அறிவுத் திறன், படைப்பாற்றல் மற்றும் கல்வியின் மீதான இடைவிடாத நாட்டம் ஆகியவற்றைக் கொண்டாடும் ஓர் விழாவாக இருந்து வருகிறது. முழுமையான கல்விக்கான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக இந்த விழா அமைந்து உள்ளது. விஞ்ஞான மனோபாவத்தை ஏற்படுத்துதல், விமர்சன மதிப்பீட்டினை உருவாக்கி வளர்த்தல், கூர்நோக்கு மற்றும் STEM தொடர்பான மாணவர்களின் திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை மேம்படுத்தி வளர்ப்பதே எங்களின் முதன்மையான நோக்கம் ஆகும். ஆர்க்கிட்ஸில், மாணவர்களுக்கு ஒரு புதுமையான கற்றல் இடத்தை உருவாக்குவதன் மூலம் அவர்கள், பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து, புதுமைப்படுத்தி மற்றும் மேம்பட்டு – கல்வியில் சிறந்து விளங்குவதை நாங்கள் எமது தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

சவால்களை ஏற்று சமாளிக்கத் தயாராக இருந்த அனைத்து மாணவர்களுக்குள்ளும் போட்டி மனப்பான்மையை உருவாக்கிய, தொழில்நுட்ப சுவை கூடிய – பெரிய மற்றும் சிறந்த விழாவாக MECHATHLON 2023 அமைந்தது. இந்த விழா கற்றலை ஈர்ப்பு உடையதாகவும், சுவாரசியமானதாகவும் ஆக்கியது, மேலும் இது மாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு முக்கியமான பிராக்டிக்கல் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டவர்களாக அவர்களை உருவாக்க உதவியது. இளம் திறமையாளர்களின் சிறப்பான திறன்களை வெளிக்கொணரவும், உத்வேகம், சவால்கள் மற்றும் அவர்களின் மிகச்சிறந்த திறன்களுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை வழங்கவும் இந்த விழா ஒரு முக்கிய குறிப்பிடத்தக்க தளமாக செயல்பட்டது.

ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியைப் பற்றி:

ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி, இந்தியாவின் முன்னணி இன்டர்நேஷனல் K12 பள்ளிகளில் ஒன்றாகும், இது தனது பயணத்தை 2002 -இல் தொடங்கியது. OIS பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்புகள், மறுவடிவமைக்கப்பட்ட கல்வித் தத்துவம், உயர்மட்ட உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் – ஒருங்கிணைந்த பாடத்திட்டத்துடன் பின்வரும் சந்ததியினருக்கான கல்வியை மறு வரையறை செய்கின்றன, புதுமையும் சிறப்பும் ஒன்றோடு ஒன்று அருகருகே அமைந்து செயல்படும் ஒரு குறிப்பிட்ட வகையான நிறுவனம் ஆர்க்கிட்ஸ் ஆகும். இது சர்வதேச கற்பித்தல் முறைகளுடன் CBSE மற்றும் ICSE பாடத்திட்டத்தைப் பின்பற்றி, கல்விசார் சிறப்போடு ஆளுமை மேம்பாட்டிற்கும் வலுவான முக்கியத்துவத்தை வழங்க வழிவகை செய்கிறது. தற்பொழுது, இது 750000+ மாணவர்கள், 7000+ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அடங்கிய போர்டிங் பள்ளிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆர்க்கிட்ஸின் முக்கிய ஆன்தம் “ஷேப்பிங் மைண்ட்ஸ், டச்சிங் லைவ்ஸ்.”

 

 

 

Related posts

Leave a Comment