விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’வில் இணைந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

 

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ப்ரீத்தி முகுந்தன் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

இந்திய சினிமாவில் தயாராகி வரும் எதிர்பார்ப்பு மிக்க விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முதல் பார்வை மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது திறமையான ப்ரீத்தி முகுந்தன் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்திலேயே ‘கண்ணப்பா’ போன்ற இந்திய சினிமாவின் பிரமாண்டமான பயணத்தில், முன்னணி நட்சத்திரங்களுடன் ப்ரீத்தி இணைந்திருப்பது பலரை வியக்க வைத்துள்ளது.

’கண்ணப்பா’ திரைப்படத்தில் ப்ரீத்தி நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு செயல்முறை கடுமையானதாக இருந்தது. கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தத்தைக் கண்டறிய பல தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு முழுமையான தேடலுக்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ப்ரீத்தி முகுந்தனை தேர்வு செய்து, அவரது விதிவிலக்கான திறமை மற்றும் அவரது தனித்துவமான கவர்ச்சியை அங்கீகரித்தார்கள். விஷ்ணு மஞ்சு, மோகன்லால் மற்றும் பிரபாஸ் உள்ளிட்ட இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுடன் ப்ரீத்தி இணைந்து நடிப்பது, அவரது திரைப்பயணத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

ப்ரீத்தி பரதநாட்டிய நடனக் கலைஞர் என்பதால், ’கண்ணப்பா’ வில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் பெரிய அளவிலான சண்டைக்காட்சிகளுடன் அவரது நடனக் காட்சிகளும் பார்வையாளர்களுக்கு காட்சி விருந்தாக இருக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் முகேஷ் குமார் சிங் கூறுகையில், “ப்ரீத்திக்கு இந்த வாய்ப்பு திரையுலகில் குறிப்பிடத்தக்கது மட்டும் அல்ல, கலை, சினிமா மற்றும் பெரும்பாலும் கற்றல் உலகிற்கு ஒரு பாய்ச்சல். அவர் இந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார், அவருடன் பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

Related posts

Leave a Comment