பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான். இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா…
Read MoreTag: தேஜா சஜ்ஜா
24 மணி நேரத்தில், 18 மில்லியன் பார்வைகள் பெற்ற “ஹனுமான்” டிரைலர்
கற்பனைத் திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் இந்திய அசல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனுமான்’. இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த பிரம்மாண்டமான படைப்பின் திரையரங்க டிரைலர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது. இந்த முன்னோட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருமித்த அளவில் நேர்மறையான வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கு பதிப்பு மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஏனைய மொழிகளிலும் வெளியான இந்த ஹனுமான் படத்தின் டிரைலருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 850 K லைக்குகளுடன்… 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று தற்போதும் யூட்யூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பிரசாந்த் வர்மா தனது அற்புதமான கதை சொல்லும் பாணியாலும் மற்றும் சர்வதேச…
Read Moreஅற்புதமான விஷ்வலுடன் ஹனுமான் டிரைலர்
அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி- பிரசாந்த் வர்மாவின் அசல் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது! நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம்..! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான ‘ஹனுமான்’ திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த முன்னோட்டத்தின் முதல் காட்சி- அஞ்சனாத்திரி இடம் பெற்றிருப்பது, நம்மை கற்பனை பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீருக்கடியில் நடக்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் முத்து ஓட்டின் அருகில் செல்வதை காட்சிப்படுத்துகிறது. ‘யதோ தர்ம ததோ ஹனுமா.. யதோ ஹனுமா ததோ ஜெய..’ (எங்கே நீதி…
Read More