தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபுதேவா பட டைட்டில் “ஜாலியோ ஜிம்கானா”

தமிழ்சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டைட்டில் கொண்ட ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தினை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- நடிகர் பிரபுதேவா காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது! டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை சிறப்பாக தயாரித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளது. ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ…

Read More

அன்னபூரணி சினிமா விமர்சனம்

பிறக்கும் போதே நாக்கின் சுவை முடிச்சிகளில் அதீத உணர்வுகளுடன் பிறக்கும் ஒரு பிராமணக் குழந்தையான அன்னபூரணி, அதே காரணத்தால் சுவை மீதும் உணவு மீதும் அதிக நாட்டம் கொள்ளுகிறாள். உணவு மீது கொண்ட நாட்டம் நாளடைவில் சமைப்பதிலும் திரும்ப, உணவு சமைத்துக் கொடுப்பது எவ்வளவு பெரிய தொண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளும் அன்னபூரணி இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆக தான வருவேன் என்று உறுதி எடுக்கிறாள். சிறுமியாக இருக்கும் போது அவள் சமைப்பதற்கு ஆதரவும் அரவணைப்பும் காட்டிய குடும்பம், அவள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போகிறேன் என்று வந்து நிற்கும் போது , தங்கள் குலத்தை காரணம் காட்டி அவளுக்கு தடை போடுகிறது. தன் குடும்பத்தை மீறி தன் இலட்சியத்தை அடைவதில் இருக்கும் தடைக்கற்களை மீறி அன்னபூரணி ஜெயித்துக் காட்டினாளா..? என்பதே இந்த “அன்னபூரணி” திரைப்படத்தின் கதை.…

Read More