பிறக்கும் போதே நாக்கின் சுவை முடிச்சிகளில் அதீத உணர்வுகளுடன் பிறக்கும் ஒரு பிராமணக் குழந்தையான அன்னபூரணி, அதே காரணத்தால் சுவை மீதும் உணவு மீதும் அதிக நாட்டம் கொள்ளுகிறாள். உணவு மீது கொண்ட நாட்டம் நாளடைவில் சமைப்பதிலும் திரும்ப, உணவு சமைத்துக் கொடுப்பது எவ்வளவு பெரிய தொண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளும் அன்னபூரணி இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆக தான வருவேன் என்று உறுதி எடுக்கிறாள். சிறுமியாக இருக்கும் போது அவள் சமைப்பதற்கு ஆதரவும் அரவணைப்பும் காட்டிய குடும்பம், அவள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போகிறேன் என்று வந்து நிற்கும் போது , தங்கள் குலத்தை காரணம் காட்டி அவளுக்கு தடை போடுகிறது. தன் குடும்பத்தை மீறி தன் இலட்சியத்தை அடைவதில் இருக்கும் தடைக்கற்களை மீறி அன்னபூரணி ஜெயித்துக் காட்டினாளா..? என்பதே இந்த “அன்னபூரணி” திரைப்படத்தின் கதை.…
Read More