ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சீன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் பிரத்யேக நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘சீன்’ படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி, மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘சீன்’ படத்தை ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கி…
Read MoreAuthor: reporter
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தில் ‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை!
மீனாட்சி இளையராஜா குரலில், விஜய் ஆண்டனி இசையில், ஏகாதேசியின் வரிகளில் உருவான தந்தை பாசத்தைப் போற்றும் பாடலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படம், அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திலிருந்து வெளியான ‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, குறுகிய காலத்திலேயே 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தந்தை என்பவர் தனது குழந்தைகளுக்காகச் செய்யும் தியாகங்களையும், அவர்களின் எதிர்காலத்திற்காகக் கொண்டிருக்கும் கனவுகளையும், அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் ‘அப்பாவ போல’ பாடல் அமைந்துள்ளது. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத தந்தையின் அன்பையும், குழந்தைகளுக்கும் தந்தைக்கும்…
Read More‘தர்மன்’ படத்தில் இணைந்தார் நயன்தாரா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பரிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் அதிரடியான ஆக்ஷன் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘தர்மன்’, தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது. இந்தப் படத்தை ராஜ்கமல்…
Read Moreபரிபாடி படத்தின் மூலம் மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா
ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்: டிசம்பரில் உலகளாவிய வெளியீடு ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிப்பதோடு, சுமார் 100 புதிய முகங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரிசூரை பின்னணியாக கொண்டு, முக்கியமாக சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, புதிய நடிகர்கள் சுமார் நான்கு மாத காலம் சிறப்பு பயிற்சிக்கு பிறகே கேமராவுக்கு முன்பு களமிறங்கினர். இப்படத்தில் நடிக்கும் சுமார் 100 புதிய முகங்களும் வசனம் பேசும் முக்கிய கதாபாத்திரங்களை…
Read Moreரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபூடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – டி-சீரிஸ் கூட்டணியில் தயாராகி, பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ‘ஃபௌஜி’ திரைப்படத்திலிருந்து, ‘ஃபைல் நம்பர் 25’ என்ற பெயரில் சக்திவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தேசபக்தியின் காவியக் கதையாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. படைப்பாற்றல் மிக்க திரைப்பட இயக்குநரான ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்ஷன் திரைப்படமான ‘ஃபௌஜி’யில், ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும்…
Read Moreஅமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
Arul Murugann Picture நிறுவனம் மற்றும் Dream Runway 26th Century சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. இப்படத்தில் அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிகளின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக அமல் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக…
Read Moreமகன் அதீப்புடன் அசத்தும் சிம்ரன்! இன்றும் குறையாத அழகும், இளமையும்… ரசிகர்களின் மனதில் என்றும் ராணி! ❤️👑
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த சிம்ரன், தனது அழகாலும், வசீகரமான புன்னகையாலும், தனித்துவமான ஸ்டைலாலும் இன்றும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறார். தனது மகன் அதீப்புடன் இணைந்து அழகாகக் காட்சியளிக்கும் சிம்ரனின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. காலங்கள் மாறினாலும், அவரது அழகும், கம்பீரமும், இயல்பான வசீகரமும் இன்னும் குறையவில்லை என்பதை இந்தப் புகைப்படம் மீண்டும் உணர்த்துகிறது. திரையில் தனது அசத்தலான நடிப்பால் தனி முத்திரை பதித்த சிம்ரன், இன்றும் தனது ஸ்டைலாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இளமைக்கும் அழகுக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தனது ஒவ்வொரு தோற்றத்திலும் தனித்துவமாக ஜொலிக்கிறார். தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் அன்பைப் பெற்றுவரும் சிம்ரனுக்கு, ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு இன்றும் தனித்துவமானது. அழகு, கம்பீரம், வசீகரம் என அனைத்திலும் தனக்கென ஓர்…
Read More418 – விமர்சனம்
ஆரம்பகால கோவிட் தொற்றுக் காலத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் குழுவொன்று, ஒரு மாணவர் விடுதிக்கு குடிபெயர்கிறது. பதினைந்து ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அந்தக் கட்டடம், அதற்கு முன் ஒரு மனநலக் காப்பகமாக இருந்தது. விவேக் சங்கர் எனும் மாணவன், அவ்விடுதியில், சீல் வைக்கப்பட்டதும் சபிக்கப்பட்டதுமான அறை எண் 418-க்கு அருகில் உள்ள 417 -க்குக் குடிபெயர்கிறான். அந்த ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் எவரும் நுழையக் கூடாது. அப்படி பெண்கள் யாரேனும் நுழைந்தால், 418 இலுள்ள அமானுஷ்ய சக்தி விழித்துக் கொள்ளும். ஏதோ அமானுஷ்யமாக உள்ளதே என உணரும் விவேக், அதைத் தெரிந்து கொள்ள 418 அறைக்குள் நுழையும் அதே சமயம், லண்டனில் இருந்து திரும்பிய கோவிட்டால் பாதிக்கப்பட்ட சாய்ஷா எனும் பெண் அந்த ஆண்கள் விடுதிக்குள் நுழைகிறார். அதனால் அசாதாரணமான பில்லி-சூனிய மர்ம சம்பவங்கள்…
Read Moreஹைக்கூ – விமர்சனம்
பெண்கள் கழிவறைக்குள் தெரியாமல் நுழைந்துவிடும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மனோவைக் கல்லூரியை விட்டு நீக்குகின்றனர். அதனால் இறுதியாண்டு படிக்க வேற கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இருபாலர் படிக்கும் கல்லூரியாக மாற்றம் பெறும் பெண்கள் கல்லூரியில், ஒரே ஒரு ஆண் மாணவனாகச் சேருகிறான் மனோ. கோவையிலுள்ள அக்கல்லூரியில், கொடி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறுகிறது. ஆனால், ஓவர் பொசஸிவாக இருக்கும் மனோவின் குணத்தால், அந்தக் காதல் முறிகிறது. கல்லூரி முடிந்து, மனோ சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அந்நிறுவனத்தில் சேரும் நிவி எனும் நிவேதாவுடன் மெல்ல காதல் மலருகிறது. நிவேதாவின் முன்னாள் காதலில், காதலனின் டாக்ஸிக்கான குணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார். மனோவோ, முந்தைய காதலில் தான் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என மெச்சூர்டாக மாறத் தொடங்கியிருப்பார். எனினும் அவர்களது காதலில்…
Read Moreசட்டமும் நீதியும் 2 – விமர்சனம்
இன்ஸ்பெக்டர் கனகவேல் தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை ரிப்போர்ட் அளிக்க, அது தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடுக்கிறார் கனகவேலின் மனைவி சந்திரா. கனகவேலுடன் ஸ்டேஷனில் பணி புரியும் நான்கு காவலர்கள் மேல் புகார் அளிக்கிறார் சந்திரா. குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் வாதாடக் கூடாதென பார் கவுன்சிலில் தீர்மானம் எட்டப்படுகிறது. ஏனென்றால் சந்திரா தான் பார் கவுன்சிலரின் தலைவர். குற்றவாளிக்குக் கூட வக்கீல் வைத்துக் கொள்ளும் உரிமையைச் சட்டம் அளித்து இருக்கும் பொழுது, ஒரு நிரபராதிக்காக வாதாட யாரையும் அனுமதிக்காதது எந்த வகையில் நியாயமாகும் என இப்ராஹிமின் மனைவி பானு, வக்கீல் சுந்தரபாண்டியனைக் கேட்கிறார். அக்கேள்வியின் கனம் உலுக்க, சுந்தரபாண்டியன் பார் கவுன்சிலை எதிர்த்து அவ்வழக்கை எடுத்துக் கொள்கிறார். சந்திரா, சி.பி.ஐ. விசாரணை கோர, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)…
Read More