“இன்றைய தலைமுறைக்கு தேசப்பற்றின் அருமையை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சியாக ‘FLAG’ திரைப்படம் அமையும். இந்த திரைப்படத்தை மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று பல்வேறு துறை பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘FLAG’ திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசப்பற்று கொண்டாட்டமாக அமையும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட உள்ளது . “140 கோடி மக்களின் தேச உணர்வை சொல்லும் FLAG திரைப்படம் – இந்த சுதந்திர தினத்தில், உங்களை குடும்பத்துடன் திரையரங்குகளில் மகிழ்விக்க வருகிறது “
Read MoreAuthor: reporter
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் டிஐ (Digital Intermediate)…
Read Moreநான்காம் தலைமுறை ரோபோட்டிக் அறுவைசிகிச்சை, பல்துறை நிபுணத்துவம்* *மற்றும் சீரான உயர்தர சிகிச்சை முறைகளை சென்னையில்* *உள்ள தனது மூன்று மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தும் ‘காவேரி 3X* *சென்னை’ செயல்திட்டம் அறிமுகம்
உயர் சிகிச்சைக்கு இந்நாட்டில் புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை குழுமம், *‘காவேரி 3X சென்னை’* என்ற பெயரில் ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், விரிவான அறுவைசிகிச்சை நிபுணத்துவம் மற்றும் அதிக திறன் கொண்ட பல்துறை மருத்துவக் குழுக்களை சென்னையில் உள்ள அதன் மூன்று மருத்துவமனைகளிலும் சீரான உயர்தர சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ் ஒன்றிணைக்கிறது. இந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டங்கள், உலகின் மிக மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றான 4-ஆம் தலைமுறை டா வின்சி ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சாதனத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இரையக குடலியல், புற்றுநோயியல், சிறுநீர்பாதையியல், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல், மற்றும் சிறுநீரக மருத்துவவியல் உள்ளிட்ட பல மருத்துவத் துறைகளில் ரோபோட்டிக் சாதன உதவியுடன் சிகிச்சையளிக்கப்படும். குடல் இரைப்பை புற்றுநோய்கள், பெருங்குடல் புற்றுநோய்கள், மகளிர் நோயியல் புற்றுநோய்கள், மார்பகப்…
Read Moreநயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து…
Read Moreடெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம் “
“தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. அவர், தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். “கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர்…
Read Moreஅக்-1ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.. சமீப காலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புத் தாரகை என்று ரசிகர்களால் பாராட்டப்படும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையை தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ‘ஏழு…
Read Moreஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider-Man: Brand New Day) – டாம் ஹாலண்டின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஜெண்டாயாவின் ‘MJ’ உடனான காதலை நினைவுகூரும் நெஞ்சை உருக்கும் இறுதி டிரெய்லர் வெளியீடு
_ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் ஜூலை 30 அன்று வெளியாகிறது. இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது._ இணைப்பு: https://youtu.be/lE2QTE64r0w?si=yHkwRAe8WOPQUft6 திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ள ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் மூன்றாவது மற்றும் இறுதி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டாம் ஹாலண்ட் நடிக்கும் இப்படம், அந்தப் பிரபலமான சூப்பர் ஹீரோவாக அவர் நடிக்கும் நான்காவது தனித் திரைப்படமாகும்; இது ‘ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்’ (Spider-Man: No Way Home) படத்தின் நிகழ்வுகளுக்குப் பிந்தைய கதையைத் தொடர்கிறது. அனைவரின் நினைவிலிருந்தும் பீட்டர் பார்க்கரை அழித்த மந்திரத்தால் ஏற்பட்ட துயரமான விளைவுகளையும், அதனால் அவர் வாழ்க்கையைத் தனிமையில் எதிர்கொள்ள வேண்டிய சூழலையும் இந்த புதிய டிரெய்லர் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தனது காதலியான MJ-உடன் இருக்க முடியாத…
Read Moreஅசல் தமிழ் இசையை மையமாகக் கொண்ட புதிய இசை ரியாலிட்டி ஷோவை ‘Rusk Media’-வின் OTT தளமான ‘Alright! TV’ அறிமுகப்படுத்துகிறது. இதில் சக்திஸ்ரீ கோபாலன், அசல் கோலார் மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் வழிகாட்டிகளாக (mentors) இணைகிறார்கள்.
சென்னை, இந்தியா, 21 ஜூலை 2026: தமிழ் சுயாதீன இசை (indie music) இப்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டிலிருந்தே இசையமைக்கும் கலைஞர்கள், பாடலாசிரியர்கள்-பாடகர்கள் முதல் ராப்பர்கள் மற்றும் மேடைக்கலைஞர்கள் வரை, ஒரு புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் இசையின் போக்கை மாற்றியமைத்து வருகின்றனர். இப்போது, அவர்களுக்கென ஒரு பிரத்யேக மேடை கிடைத்துள்ளது. ஜூலை 23 அன்று தொடங்கவுள்ள ‘I-POPSTAR Tamil’, அசல் தமிழ் இசையையும் அதை உருவாக்கும் கலைஞர்களையும் கொண்டாடும் ஒரு புதிய இசை ரியாலிட்டி தொடராகும். இத்தொடர் ‘Alright! TV’-யில் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ‘Media Masons’ யூடியூப் சேனலில் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகும். தமிழகம் முழுவதிலுமிருந்து புதிய திறமையாளர்களைக் கண்டறிவதையும், மாநிலத்தின் வளர்ந்து வரும் சுயாதீன இசை இயக்கத்தை பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக்…
Read Moreடாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.
‘தபாஹி- Tabaahi ‘பாடலின் அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations) – கே வி என் புரொடக்ஷன்ஸ் ( K V N Productions) மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ( Zee Music Company) ஆகியவை இணைந்து, யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை வழங்குகின்றன. ‘தபாஹி’ பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் ‘தடுமாறுதே’ எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. ‘தபாஹி’ பாடல் – தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில்… ‘தடுமாறுதே’ பாடல்- மென்மையான…
Read Moreஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5!
இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில், இந்தியாவின் துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மனதை கவரும் கதைகளை ஒரே தளத்தில் வழங்கும் ZEE5 பொழுதுபோக்கு உலகம் என்பது டிரெண்டிங்கை பின்பற்றுவதால் வளர்வதில்லை; புதிய டிரெண்டிங்கை உருவாக்குவதன் மூலமே வளர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் (Content Slate) பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான பொழுதுபோக்கு உலகத்தை ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.…
Read More
