மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்க டிரெய்லர்,…
Read MoreAuthor: reporter
ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…
‘சேயோன்’ – சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரு.கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு பிரம்மாண்டமான தொடக்க விழாவாக இது அமைந்தது. அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ஒருமுறை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் கைகோர்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க மறுஇணைவாக…
Read Moreடொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிரடி படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்
இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை…
Read Moreஉலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!
சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன. 1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் படைப்புகள், உலக சினிமா வரலாற்றில் மிக ஆழமான உணர்வுகளையும் கலாச்சார தாக்கத்தையும் ஏற்படுத்திய இசையாகத் திகழ்கின்றன. இந்த விழா ஒரு சாதாரண மைல்கல் அல்ல; மனிதகுலத்திற்கு ஒரே…
Read Moreஅட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்….
தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெயர் வெளியானதும், ரசிகர்கள்…
Read More“தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்
சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ‘மண்டவெட்டி’ படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி. இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல்ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி. மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக்…
Read Moreதமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க வேண்டும் – ’சிலம்பம்’ பட விழாவில் முதல்வர் விஜய்க்கு இயக்குநர் மோகன்.ஜி கோரிக்கை
லக்ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளரான ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் M ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்ய, கென்னடி நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். பொன்னேரி புயல் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். இணை இயக்குநராக ஏ.அருண்குமார் பணியாற்ற, தயாரிப்பு நிர்வாகியாக கோவிந்தராஜ் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 16 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர் பாண்டியன், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் கூல்…
Read Moreஇண்டிபெண்டன்ட் ஆல்பங்களில் நடித்த kCP மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக அறிமுகமாகும் “பூ காய் கனி”
இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை…. இப்படத்தை *அரும்பு மீசை குறும்பு பார்வை*, *வெண்ணிலா வீடு* ,*விசிறி*, போன்ற படங்களை இயக்கிய. இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்*இயக்குகிறார். இவர் சமீபத்தில் தான் *அயலி* வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி *புகழ் * நடித்த *சூட்கேஸ்* படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது…. மேலும் தற்போது முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் படம் தான் *பூ காய் கனி*. தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும் என்கிறார்…. *சூட்கேஸ்* படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த *ராஜேஸ்வரி வெற்றிவீரன்* அவர்கள் *பூ காய் கனி* படத்தை *பழையனூர் சந்தனம் பட கம்பெனி* சார்பாக தயாரிக்கிறார்…
Read Moreசட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்
கதை… ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெய் நாயகி மீனாட்சியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.. இருவரும் காதலிக்க அவர்களின் திருமணம் சுபமாக முடிகிறது.. இதனையடுத்து தேன் நிலவுக்கு கொடைக்கானல் செல்கின்றனர்.. அங்கு கருடா ராம் நடத்தும் ரிசார்டில் தங்குகின்றனர்.. அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்கள் உருவாகிறது.. ஒரு பக்கம் இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்துகிறார் மீனாட்சி அப்பா அமைச்சர் அஜய். மறுபக்கம் நண்பரும் இவரை கட்டிக்க ஆசைப்படுகிறார்.. இப்படியான சூழ்நிலையில் மீனாட்சி என்ன செய்தார்.? ஜெய்யுடன் மீண்டும் இணைந்தாரா.? இவர்களுக்கு பிரச்சனை எப்படி உருவானது.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… கிட்டத்தட்ட விஜய்யின் ரசிகராகவே சில இடங்களில் உருவெடுத்து இருக்கிறார் ஜெய்.. சமீபத்தில் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்து இருந்தார். அதன் பிரதிபலிப்பு என்னவோ..?? ஐடி கம்பெனி துள்ளல் இளைஞராக…
Read Moreநாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்
நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார். வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்: * செயற்கைக் கால்கள்: ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. * மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை…
Read More