நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார். வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்: * செயற்கைக் கால்கள்: ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. * மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை…

Read More

ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!

ஜியோஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும். ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான ‘உப்பு புளி காரம்’, ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘ரிசார்ட்’ ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது. இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (நடிகர் போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் கலகலப்பும்,…

Read More

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும் திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம்…

Read More

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை

கமல்ஹாசன் அறிக்கையின் சாராம்சம்: என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும். இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும். சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் திரைப்படத்திற்கு முறையாகப் பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி…

Read More

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்! இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் ‘சிறை’…

Read More

EXAM – வெப் சீரிஸ் விமர்சனம்

கதை… அரசு உயர் பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை வைத்து இந்த எக்ஸாம் என்ற இணைய தொடர் உருவாகியுள்ளது.. ஒரு பகுதியில் உள்ள அரசு பதவிப் பணியில் சேர வருகிறார் அதிதி பாலன்.. வரும் வழியில் அவரை கடத்தி விடுகிறார் துஷாரா விஜயன்.. கடத்தி விட்டு அந்த இடத்திற்கு பணியில் சேர நுழைகிறார்.. அவரை விட்டு இவர் அந்த பணியில் சேர என்ன காரணம்.? இதன் பின்னணியில் நடந்தது என்ன.? அரசு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் என்ன.? அதற்கு சில அதிகாரிகளை உடந்தையாக இருப்பதன் பின்னணி என்ன.? இதனால் திறமையானவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுவது ஆகியவைகளை EXAM இணைய தொடர் விவரிக்கிறது.. நடிகர்கள்… துஷாரா விஜயன் – ஜான்சி அதிதி பாலன் – மரமல்லி அப்பாஸ் – ஜெயச்சந்திரன் வசுந்தரா. சி – சரண்யா…

Read More

கருப்பு – விமர்சனம்

கதை… கேரளாவில் இருந்து சென்னைக்கு தன் மகளின் சிகிச்சைக்காக வருகிறார் இந்திரன்ஸ்.. வந்த இடத்தில் தன் நகை பணத்தை பறி கொடுக்கிறார்.. எனவே புகார் கொடுக்க அது வழக்காக மாறி விசாரணைக்கு வருகிறது.. அவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்து விடலாம் என திட்டம் போடுகிறார் வக்கீல் ஆர்.ஜே பாலாஜி.. இவரின் சாம்ராஜ்ஜியம் அந்த நீதிமன்றம் என்ற சொல்லலாம்.. நீதிமன்றத்தையும் நீதிபதியையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வக்கீல் ஆர் ஜே பாலாஜி.. வழக்கு மெல்ல மெல்ல நகரும் நேரத்தில் தன் மகளையும் பறிகொடுக்கிறார் இந்திரன்.. இதனை எடுத்து அந்த கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பு சாமியிடம் தன் பிரச்சனையை முறையிடுகிறார்.. அப்போது சூர்யா கருப்பசாமியாக வக்கீலாக உருவெடுத்து வருகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை நடிகர்கள்… படத்தின் கதாநாயகன் சூர்யா என்றாலும் கதையின் நாயகன் ஆர் ஜே…

Read More

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது. பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும்…

Read More

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் — ZEE5-ல் ‘கொலை சேவல்’

இந்தியா, 15 மே 2026: ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் இருண்ட பக்கங்களை ஒரு நாட்டுப்புற பின்னணியில் ஆழமாக ஆராயும் வலுவான கதையை கொண்டுள்ளது. தனித்துவமான தலைப்பும், இயல்பான கதை சொல்லும் முறையும் கொண்ட கொலை சேவல், அதன் யதார்த்தமான அணுகுமுறை மற்றும் சூழல்மிக்க காட்சிப்படுத்தலால் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக புதைந்திருந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படுகின்ற ஒரு பதற்றமான விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம், இறுதி வரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நகர்கிறது. சந்தேகமும் பதற்றமும் நிறைந்த கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள…

Read More

திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் ‘ஹபீபி’. மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து ‘யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புதிய திறமையாளர்களுடன்…

Read More