“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள்…
Read MoreAuthor: reporter
MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது
அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி- The India Story ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன்…
Read Moreமுதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!
எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர் சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா’ புத்தகம் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நான் எழுதி, சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் புத்தகம் ‘சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)’. அது என்ன சினிமா ரசனை கல்வி என்றால் பள்ளிக்கூடங்களில் ஸ்போர்ட்ஸ், ஓவியம் என்று பல விஷயங்களும் சொல்லித் தருகிறார்கள். ஆனால் எல்லோரும் விளையாட்டு வீரர்களாகவோ, ஓவியர்கள் ஆகவோ மின்னுவதில்லை. இப்படி நுண்கலைகளுக்கு நம்மிடம் வகுப்புகள் உள்ளது. ஆனால், நம் மக்களின் நாடி நரம்புகளில் ஊறி இருக்கும் சினிமாவைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்தும் வகுப்புகள் இங்கே இல்லை. குறிப்பாக, இன்றைய தலைமுறை குழந்தைகள் பெரும்பாலும் செல்ஃபோனுடன்…
Read Moreசோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு. சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது…
Read Moreகியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்
2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான ‘காட்டாளன்’ உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழகமெங்கும் மே 28ம் தேதி வெளியிடுகிறார். பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. “பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும், அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை ஒவ்வொரு நிமிடமும் பரவசத்தில் ஆழ்த்தும்,” என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். ‘காட்டாளன்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன்,…
Read More‘திரிஷ்யம் 3’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது…
Read MorePritam and Pedro to feature Vir Hirani, Arshad Warsi, Vikrant Massey, Boman Irani and Mona Singh in pivotal roles* Link Asset: https://www.instagram.com/reel/DYjWa7qM8M2/?igsh=ejhsbnd5NDBhZ3M3
Mumbai, May 20th 2026:* What happens when Goa’s chaos collides with cybercrime, confusion and two completely mismatched men stuck in the middle of it all? The teaser of Pritam and Pedro offers audiences a fun first glimpse into a quirky world where data meets danda, chaos meets confusion, and two completely mismatched men seem to be stuck in the middle of it all. Introducing Vir Hirani as Pritam and Arshad Warsi as Pedro, the teaser hints at a wildly entertaining dynamic between the two, with Vikrant Massey’s Martin adding to…
Read Moreஅமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” – ரசிகர்களை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!
திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது. இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான…
Read Moreஉத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது
இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும். பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால்…
Read MoreWhen Iconic Storytelling Meets India’s Biggest Streaming Destination: JioHotstar & Rajkumar Hirani Present ‘Pritam and Pedro’, premiering July 3
Mumbai, India, May 19, 2026: Sometimes, the biggest stories begin with the most unexpected clues. An abandoned ATM on a beach, two unlikely men standing beside it, and a mystery strange enough to instantly spark curiosity. Pritam and Pedro marks Rajkumar Hirani’s much-anticipated streaming debut, bringing his signature blend of warmth, emotion and human storytelling into the long-format space for the very first time. The collaboration also signals an exciting coming together of cinematic storytelling and large-scale streaming entertainment, promising audiences a fresh and immersive new experience. Pritam and Pedro,…
Read More