டிரோன்ஸ் விமர்சனம் 4/5.. – சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் திரைப்படம்

கதை…

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் டிராவிட் – அஞ்சலி நாயர் – ஆர் ஜே தீபக் இவர்கள் மூவரும் ஒரு பிரச்சனையில் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.. இது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் சிலர் நாட்கள் வெளியே தங்க திட்டம் போடுகின்றனர்.. அதன்படி பிளாக் ஹோல் என்ற ஆராய்ச்சி கூடத்தில் தங்குகின்றனர்..

ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அப்போது அவர்களுக்கு ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது..

அப்போது சித்தி இதாணி அழகிய பெண்ணை காண்கிறார் டிராவிட்.. அவர் மீதும் காதல் கொள்கிறார்..

அதன் பிறகு என்ன நடந்தது..? அவர்கள் வெளியே வந்தார்களா டிராவிட் காதல் ஆசை நிறைவேறியதா.? என்பதெல்லாம் வித்தியாசமான யூகிக்க முடியாத பேண்டஸி கலந்த திரில்லர்..

நடிகர்கள்…

காமெடி செய்யும் கதாநாயகன் வேடத்தில் டிராவிட் செல்வம்.. இவர் பரிதாபங்கள் youtube மூலம் பிரபலமானவர்.. கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கிறார்..

அழகிய தேவதையாக சித்தி இதாணி.. நடிப்பிலும் அழகிலும் மனதை கொள்ளை அடிக்கிறார்.. மற்றொரு ஹீரோயின் அஞ்சலி நாயர்.. அழகும் திறமை வாய்ந்த இவருக்கு நிறம் குறித்த அரசியல் பேசும் கதாபாத்திரம்.. அசத்தியிருக்கிறார்..

சூனியக்காரி பாட்டி வேடத்தில் தேவதர்ஷினி.. நடிப்பில் மிரட்டி இருக்கிறார்..

காவல் அதிகாரியாக சினிமாவாலா சதீஷ்.. மிடுக்கான தோற்றம்.. திருமணம் ஆகாத ஏக்கம்.. நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.. குரேஷி காமெடியில் கலக்கி இருக்கிறார்.. ஆர்.ஜே.தீபக் & சசி செல்வராஜ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு..


தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ஹரி.யின் இசையில் பாடல்கள் சிறப்பு.. பின்னணி இசை கதையுடன் ஒன்றி பயணிக்கிறது

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்.. பெரும்பாலும் ஒரே இடம் தான் ஆனால் அது பல கோணங்களில் படம் பிடித்து கலர்ஃபுல்லாக்கி இருக்கிறார்…

படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, கலை இயக்குநர் ஆர்.கிஷோர், ஆடை வடிவமைப்பாளர் ஹர்ஷிகா ரமேஷ் ஆகியோரது பணி சிறப்பு.

நாம் நமது பள்ளி காலங்களில் படித்த காமிக்ஸ் சூனியக்காரி பேய் கதைகளின் ஒட்டு மொத்த உருவமாக இந்த படம் வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல..

இத்துடன் பறக்கும் தட்டு கற்பனை கலந்து குழந்தைகளை கவரும் வகையில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத்..

ஃபேண்டஸி ட்ரில்லர் கதையாக இருந்தாலும் ஒரு பக்கம் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார்… அறிவியல் ஆராய்ச்சி… நிற அரசியலையும் சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ராகவ் மிர்தாத்..

Related posts

Leave a Comment