இராணிப்பேட்டை – இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். திருமதி பெ. தேன்மொழி அவர்கள் 12.12.1990 முதல் ஆசிரியர் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் நல்வாழ்வில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவரது கல்விப் பணிக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது அர்ப்பணிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. மேலும், திருமதி பெ. தேன்மொழி அவர்கள் பிரபல பாடகர் அறிவு அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணி – வகுப்பறையைத் தாண்டிய சமூகப் பொறுப்பு ஒரு சிறந்த ஆசிரியரின் பணி என்பது…
Read MoreAuthor: reporter
செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்- Cold Call’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் – கிருஷ்ணா விஜய் – ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கோல்டு கால் – Cold Call’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோல்டு கால்’. இதில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் , ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…
Read More‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன்,…
Read Moreமுதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர்
Trailer Link: https://youtu.be/NlsAkp8WZMs டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் தயாரிப்பில் ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘ஹோப்’. படைப்பாக்கத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்திற்கு உரித்தான பட்ஜெட்டில் உலகத்தரத்தில் உருவாகியுள்ள ‘ஹோப்’ படத்தில் ‘நாடோடிகள்’ புகழ் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘ஹோப்’ முதல் பார்வை மற்றும் டிரெய்லரை கடந்த ஞாயிறு (06.09.2026) அன்று காலை இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர்-நடிகர் சசிகுமார்,இயக்குநர்-நடிகர் சமுத்திரக்கனி, இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல், பிரதீப் ஈ. ராகவ், கமலா திரையரங்க நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில்…
Read Moreநடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார். டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான அபிஷன் ஜீவிந்த்தின் புதிய தலைமுறை நடிப்புத் திறன் இணையும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்…
Read Moreவிறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக நகைச்சுவை மற்றும் இதர அம்சங்களுடன் உருவாகவுள்ள ‘ஏஜிஎஸ் 29’
தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இதற்கு முன்னர் இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது. ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ என்று அழைக்கப்படும் இந்த படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியிலேயே…
Read Moreஇளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் “கடவுள் தந்த பரிசு”
திரையுலகில் தனது 50வது வருடத்தில் ராஜநடை போட்டு, பவனி வரும் இசைஞானி இளையராஜா, மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள். இசைஞானியும், மக்கள் நாயகனும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ஏங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாடல் பதிவுடன் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
Read Moreஎன் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் – அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி. ‘வதந்தி சீசன் 2’ இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி தன் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிடும் போஸ்ட்டிற்கு லைக்கும், ஷேரும் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அவரை சந்தித்தோம். கலைத்துறை…
Read MoreAI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பிட்ட போலிப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஆணையிட்டுள்ள நீதிமன்றம், இவை தொடர்ந்து இணையத்தில் உலாவுவது அவரது நற்பெயருக்கும், சமூக மதிப்பிற்கும், வர்த்தக ரீதியான வாய்ப்புகளுக்கும் மீட்க முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.…
Read More‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில், “முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில்…
Read More
