தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். நாயகனை மையமாகக் கொண்ட கதை, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வது என வெவ்வேறு ஜானர்களில் நடிகராக தனது எல்லைகளை உடைத்துள்ளார். ‘பேராண்மை’ போன்ற படங்களிலிருந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘தனி ஒருவன்’ வரை, ரவி மோகனின் திரைப்படப் பயணமும், பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்கும் துணிச்சலும் அவரை தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் பன்முகத் திறன் கொண்ட நடிகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ‘பென்ஸ்’ படத்தில் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கின்றனர். LCU-வில் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
Read MoreAuthor: reporter
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன்…
Read Moreகனவுகளிலிருந்து நடன மேடைகள் வரை: 250 பாடல்களின் மைல்கல்லை கொண்டாடும் நடன அமைப்பாளர் ஷெரீஃப்!
புகழ்பெற்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில் வெற்றி பெற்றதிலிருந்து, தென்னிந்திய திரைப்பட உலகின் மிகவும் விரும்பப்படும் நடன அமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் ஷெரீஃப். அவரது இந்த ஊக்கமூட்டும் பயணம், ஆர்வம், விடாமுயற்சி மற்றும் இடையறாத கடின உழைப்பின் பலனாக உருவானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அசாமி திரைப்படங்களில் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள ஷெரீஃப், தற்போது தனது 250வது பாடலை நடன அமைப்பாளராக நிறைவு செய்து ஒரு சிறப்பான மைல்கல்லை எட்டியுள்ளார். சூது கவ்வும் திரைப்படத்தின் “காசு பணம்” போன்ற நினைவில் நிற்கும் ஹிட் பாடல்களிலிருந்து, பேட்டவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடனமாட வைத்தது வரை, மேலும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யாவின் “கனிமா” பாடலுக்கு புதுமையான நடன விருந்தை படைத்ததுவரை, ஷெரீஃபின் நடன அமைப்புகள் எப்போதும்…
Read Moreநடிகர் அஜித் குமாரின் அம்மா காலமானார்!!
எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற இனிய நினைவுகள், அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம் மற்றும் அவரது அன்பாலும் கருணையாலும் அவர் தொட்டுச் சென்ற பலரின் வாழ்வுகள் எங்களுக்கு ஆறுதலாக உள்ளன. இந்த கடினமான நேரத்தில் தங்களது பிரார்த்தனைகள், இரங்கல் செய்திகள் மற்றும் ஆறுதல் வார்த்தைகள் மூலம்…
Read More“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.
SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் என்றே சொல்லலாம். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி முதல் பொன்னியின் செல்வன் வரை, ரவி மோகன் பல வேடங்களில் நடித்திருக்கிறார், இப்போது அவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால், மனதளவில் தான் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் ஒரு திரைப்பட மாணவர் என்றே அவர் குறிப்பிடுகிறார். பள்ளிக்காலத்தில் அவர் முன்வரிசை மாணவராக இருந்திருக்காவிட்டாலும், கல்லூரிக்காலம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. “எனக்கு எதன் மீது உண்மையான ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக நான் எனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்; எனக்கு அந்த விஷயம் ‘சினிமா’தான்,” என்று,…
Read Moreதமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது…
Read Moreஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வித்தியாசமான கிராஃபிக் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சென்னை நகரின் பரபரப்பான சாலையின் நடுவே ஜீவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீநாத் பாஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தியுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றுகிறது என்பதைக் கூறும் ஆக்ஷன் த்ரில்லர்தான் ‘வெக்கை’.” அன்றாட வாழ்வில் சாதாரணமாக தோன்றும் சாலைத் தகராறுகளின் பின்னால் மறைந்திருக்கும்…
Read Moreதிரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!
இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில், சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்தியவர்களில் பாலாஜி சக்திவேலும் ஒருவர். உணர்ச்சி ஆழமும் யதார்த்தமும் கொண்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து வரும் அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். ‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் மனதைத் தொடும் நடிப்பு, அதனைத் தொடர்ந்து ‘வாரண்ட்’ இணையத் தொடரில் முக்கியமான தோற்றம் ஆகியவற்றின் மூலம், தரமான நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் பாலாஜி சக்திவேல். இந்த கலைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தற்போது அவர் 12 நிமிட பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.…
Read Moreபிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.
இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் “ரஞ்சன்” படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள். இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது. திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Moreகாட்டாளன் – விமர்சனம்
கதை… புஷ்பா பட கதையை போல காட்டுக்குள் நடக்கும் ஒரு கதை தான்.. ஆனால் அதில் சந்தன மரக் கடத்தல் இருக்கும்.. இதில் யானை தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் கும்பல் கதை.. சட்டவிரோதமாக யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாதிக்கிறார் சுனில்.. இதனால் இவருக்கு பல கும்பல்கள் மிரட்டல் கொடுக்கின்றனர்.. ஒரு பக்கம் காவல்துறையும் மிரட்டுகிறது.. ஆனாலும் தன் காட்டுக்குள் தனி ஆளாக உயர்ந்து நிற்கிறார்.. ஒரு கட்டத்தில் இவருக்கு பக்கபலமாக வந்து சேர்கிறார் ஆண்டனி வர்கீஸ்.. இதனால் கடத்தல் சாம்ராஜ்யத்தில் உயர்ந்து கொடி கட்டி பறக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இன மக்களுக்கு உதவி தேவைப்பட சுனிலின் உதவியை நாடுகிறார் ஆண்டனி.. ஆனால் இவருக்கு ஏமாற்றம் வரவே சுனிலை எதிர்க்க துணிகிறார் ஆண்டனி வர்கீஸ்.. அதன் பிறகு…
Read More