டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் தற்போது ‘ஆகாயம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள அவர், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார். இன்றைய விழாவில் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பேசியதாவது.., “இது என்னுடைய முதல் மேடை என்பதால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘ஆகாயம்’ படத்தின் டிரைலர், பாடல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மீடியாவின் ஒரு செய்தி…
Read MoreAuthor: reporter
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட அரசியல் த்ரில்லர் படத்தின் டீசர் – இயக்குநர் தினா ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக ‘Bloody Politics’ உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 107 விநாடிகள் கொண்ட இந்த டீசர் படத்தின் கதைக்களம் குறித்த ஒரு பார்வையை கொடுக்கின்றது. அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆக்ரோஷமான இளைஞராக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் டீசரில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அழுத்தமான வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது. இயக்குநர்கள் பி. வாசு மற்றும் செல்வராகவன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் டீசரில் கவனம் ஈர்க்கின்றது. படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதால் இது ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவமாக இருக்கும்…
Read Moreஉணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞருக்கு கிடைத்த வரம்”… ‘என்ன விலை’ திரைப்படம் குறித்து நடிகை விஜயலட்சுமி வீரமணி!
தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருபவர் நடிகை விஜயலட்சுமி வீரமணி. ‘மாவீரன்’, ‘செம்பி’, ‘கஜானா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘ஆபீஸ்’ தொடரிலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வரும் விஜயலட்சுமி வீரமணி, தற்போது சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, உணர்வுப்பூர்வமான பாலம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் விஜயலட்சுமி கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையையும், இதுவரை அவர் ஏற்று நடித்திராத மாறுபட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பையும் பார்க்க முடிகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை விஜயலட்சுமி வீரமணி பகிர்ந்துள்ளார். நடிகை…
Read Moreநடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
இன்றைய நவீன சூழலில், ஒரு திரைப்படத்தின் ஆயுட்காலம் என்பது இனி திரையரங்குகளில் அது ஓடும் காலத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக, பழம்பெரும் இந்திய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’ அமைந்துள்ளது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது சர்வதேச அளவில் ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது. ஆர். மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜி.டி.என்.’ திரைப்படம், விமர்சகர்களின் பாராட்டுகளாலும், ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவாக மாதவனின் சிறப்பான நடிப்பைப் பாராட்டிய ரசிகர்களின் வாய்மொழிப் பரிந்துரைகளாலும் நான்கு வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. ஜி.டி.…
Read Moreஉணர்வுப்பூர்வமான விடைபெறல்: மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் வீட்டிலிருந்து வெளியேறும் பிளாக் பாண்டி
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், பிளாக் பாண்டி தனது சக போட்டியாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக விடைபெற்று, மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பிளாக் பாண்டியின் உடல்நிலைக்கு அவ்வப்போது மருத்துவ கவனிப்பும் தொடர் சிகிச்சையும் தேவைப்படும் நிலையில், அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, தேவையான மருத்துவ கவனிப்பைப் பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் நெகிழச் செய்யும் வகையில் அவரது விடைபெறும் தருணம் அமைந்தது. பிளாக் பாண்டி வீட்டை விட்டு வெளியேறத் தயாரானபோது, சக போட்டியாளர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருவர் பின் ஒருவராக அவரை கட்டியணைத்து, கண்ணீருடன் விடை கொடுத்து, தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர். பிளாக் பாண்டியின் வெளியேற்றம் ஒரு விளையாட்டுப் பயணத்தின் முடிவாக மட்டுமல்லாமல், பிக் பாஸ்…
Read More“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார். “பிரபாஸ் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி…
Read MoreBigg Boss Tamil-ல் அதிரடி திருப்பம்! முதல் முறையாக யார் வெளியேற வேண்டும் என்பதை போட்டியாளர்களே முடிவு செய்யும் அதிகாரம் – தன்யா, முனியம்மாள் அல்லது சவின்யா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக எவிக்ஷன் முடிவு போட்டியாளர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை சக போட்டியாளர்களே தீர்மானிக்க உள்ளனர். இந்த வார எவிக்ஷனுக்காக கேப்டன் வினோத் பாபுவால் தன்யா பல்லத், முனியம்மாள் மற்றும் சவின்யா ஆகிய மூவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வழக்கமான எவிக்ஷனைப் போல இல்லாமல், இந்த முறை இவர்களில் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முடிவு சக போட்டியாளர்களிடம் வழங்கப்படுகிறது. இதனால் வீட்டிற்குள் நட்பும், பகையும், தனிப்பட்ட உறவுகளும் சோதனைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் விளையாட்டை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு எடுப்பார்களா? அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இந்த முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதற்கிடையில், முனியம்மாள் தனது நாமினேஷனுக்கு…
Read More‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதி அத்தியாயத்தை மீண்டும் பெரிய திரையில் காணத் தயாராகுங்கள்! செப்டம்பர் 25ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைத்து பிரீமியம் திரையிடல் வடிவங்களிலும் வெளியாகிறது. மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்திற்கான முன்பதிவு ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE போன்ற பிரீமியம் திரையிடல் வடிவங்களில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் இந்திய திரையரங்குகளுக்கு வருகிறது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் ரசிகர்கள் அனுபவிக்க இந்த வெளியீடு வாய்ப்பளிக்கிறது. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியும் இதில் இடம்பெறுகிறது. ‘அவெஞ்சர்ஸ்:…
Read Moreமண்டாடி – விமர்சனம் 4.5/5..
கதை… சென்னையில் வசித்து வருகிறார் சூரி.. ராமநாதபுரத்தில் இருக்கும் இவரது நண்பர் ஒருவரின் மகன் உயிருக்கு பிரச்சினை என்பதால் சூரியிடம் உதவி கேட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.. ஆனால் ஒரு கட்டத்தில் சூரியை வில்லன்கள் சுற்றி வளைக்க மீண்டும் தன் சொந்த ஊருக்கே சென்று சவாலை எதிர்கொள்ள செல்கிறார் சூரி.. 20 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு செல்லும் சூரிக்கு அங்கு மீண்டும் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.. அப்படி என்றால் தான் தன் நண்பன் மகனின் உயிரை காப்பாற்ற முடியும் சூழ்நிலையில் சூரி என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… முகவை மைந்தன்ஸ் அணி – சூரி சுனாமி ரைடர்ஸ் அணி.. – சுஹாஸ் இந்த இரண்டு அணியின் கேப்டன்களும் பட்டையைக் கிளப்பு இருக்கின்றனர்.. கதாநாயகனாக மாறிய பிறகு…
Read Moreசர்தார் 2 விமர்சனம்…
கதை… இன்றைய நவீன மருத்துவ உலகில் ஆன்டிபயாட்டிக் என்ற பெயரில் டாக்டர் ஆலோசனை இல்லாமல் பல மருந்துகளை நாம் நம் இஷ்டத்திற்கு எடுத்து வருகிறோம்.. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து பலவிதமான பிரச்சனைகளை பக்க விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.. இத்துடன் ஒவ்வொரு தினமும் கோடிக்கணக்கில் இன்ஜெக்ஷன் செய்யப்பட்ட பிராய்லர் கோழிகளை சுவை என நினைத்து விஷத்தை உண்டு வருகிறோம்.. இதன் மூலம் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு சொல்ல ஒரு புதுவிதமான முயற்சியை மேற்கொள்கிறார் வில்லன் எஸ் ஜே சூர்யா.. லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கெமிக்கல் மூலம் மனித இனத்தை அழித்து அதற்கு தீர்வு சொல்ல நினைக்கிறார்… இதனால் வில்லன் எஸ் ஜே சூர்யாவை அப்பா மற்றும் மகன் கார்த்திக் என இரண்டு கேரக்டர்கள் எதிர்கொள்கின்றனர். அதன் பிறகு…
Read More
