இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதி அத்தியாயத்தை மீண்டும் பெரிய திரையில் காணத் தயாராகுங்கள்! செப்டம்பர் 25ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைத்து பிரீமியம் திரையிடல் வடிவங்களிலும் வெளியாகிறது. மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்திற்கான முன்பதிவு ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE போன்ற பிரீமியம் திரையிடல் வடிவங்களில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் இந்திய திரையரங்குகளுக்கு வருகிறது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் ரசிகர்கள் அனுபவிக்க இந்த வெளியீடு வாய்ப்பளிக்கிறது. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியும் இதில் இடம்பெறுகிறது. ‘அவெஞ்சர்ஸ்:…
Read MoreAuthor: reporter
மண்டாடி – விமர்சனம் 4.5/5..
கதை… சென்னையில் வசித்து வருகிறார் சூரி.. ராமநாதபுரத்தில் இருக்கும் இவரது நண்பர் ஒருவரின் மகன் உயிருக்கு பிரச்சினை என்பதால் சூரியிடம் உதவி கேட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.. ஆனால் ஒரு கட்டத்தில் சூரியை வில்லன்கள் சுற்றி வளைக்க மீண்டும் தன் சொந்த ஊருக்கே சென்று சவாலை எதிர்கொள்ள செல்கிறார் சூரி.. 20 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு செல்லும் சூரிக்கு அங்கு மீண்டும் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.. அப்படி என்றால் தான் தன் நண்பன் மகனின் உயிரை காப்பாற்ற முடியும் சூழ்நிலையில் சூரி என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… முகவை மைந்தன்ஸ் அணி – சூரி சுனாமி ரைடர்ஸ் அணி.. – சுஹாஸ் இந்த இரண்டு அணியின் கேப்டன்களும் பட்டையைக் கிளப்பு இருக்கின்றனர்.. கதாநாயகனாக மாறிய பிறகு…
Read Moreசர்தார் 2 விமர்சனம்…
கதை… இன்றைய நவீன மருத்துவ உலகில் ஆன்டிபயாட்டிக் என்ற பெயரில் டாக்டர் ஆலோசனை இல்லாமல் பல மருந்துகளை நாம் நம் இஷ்டத்திற்கு எடுத்து வருகிறோம்.. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து பலவிதமான பிரச்சனைகளை பக்க விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.. இத்துடன் ஒவ்வொரு தினமும் கோடிக்கணக்கில் இன்ஜெக்ஷன் செய்யப்பட்ட பிராய்லர் கோழிகளை சுவை என நினைத்து விஷத்தை உண்டு வருகிறோம்.. இதன் மூலம் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு சொல்ல ஒரு புதுவிதமான முயற்சியை மேற்கொள்கிறார் வில்லன் எஸ் ஜே சூர்யா.. லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கெமிக்கல் மூலம் மனித இனத்தை அழித்து அதற்கு தீர்வு சொல்ல நினைக்கிறார்… இதனால் வில்லன் எஸ் ஜே சூர்யாவை அப்பா மற்றும் மகன் கார்த்திக் என இரண்டு கேரக்டர்கள் எதிர்கொள்கின்றனர். அதன் பிறகு…
Read Moreஇந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்படும் குடும்பத் த்ரில்லராக உள்ளது. விஜய் சல்காவோங்கரின் உலகம் பார்வையாளர்களை கவர்ந்ததுடன், பல விவாதங்களையும் உருவாக்கியது. ஒவ்வொரு கட்டத்திலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இருந்தனர். இந்நிலையில், இறுதி அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ’த்ரிஷ்யம்…
Read Moreஅரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி
தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முன்னாள் முதல்வர்களின் அமைச்சரவைகளிலும் பணியாற்றிய அவர், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து…
Read Moreதேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, தமிழக அரசு விருதுபெற்ற ‘வாழ்க விவசாயி’ திரைப்படம் விரைவில் வெளிவருகிறது. பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். வசுந்தரா அப்புக்குட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்ததற்காக அப்புக்குட்டி தேசிய விருது பெற்றிருந்தார். அப்புக்குட்டி நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் சர்வதேச விருது பெற்றது. தேசிய விருது, மாநில விருது, சர்வதேச விருதுகள் தனது நடிப்புத் திறமையால் பெற்றுவரும் அப்புக்குட்டிக்கு, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களும் தொடர்ந்து வந்துக் கொண்டுள்ளது. ஆர் கண்ணியப்பன் படத்தில் முழுநீள காமெடி செய்துள்ளார் அப்புக்குட்டி. அரி கொம்பன் படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். வாழ்க விவசாயி படத்தின் இயக்குநர் பொன்னி மோகனின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார் அப்புக்குட்டி. கதையின் நாயகனாக அப்புக்குட்டி நடித்து வந்தாலும், காமெடி…
Read Moreகுரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படமான ‘பாரிஸ் கஃபே’, வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படம், காதல், உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கு முன்பாக, ஜூன் 5, 2026 அன்று இயக்குநர் சசிகுமார் வெளியிட்ட படத்தின் டீசரும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் உலகத்தைப் பற்றிய ஒரு சிறிய பார்வையை வழங்கிய அந்த டீசர், ‘பாரிஸ் கஃபே’ மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியது. குரு…
Read More“இம்மார்டல்” படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது!
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது.., “விநியோகம் என்பது வியாபாரம் சம்பந்தப்பட்டது என்றாலும், ஒரு படம் வெற்றி பெறும்போது கிடைக்கும் சந்தோஷமும் உற்சாகமும் எனக்கு மிகப்பெரிய எனர்ஜி. அந்த வகையில் ‘இம்மார்டல்’ படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு மனமார்ந்த நன்றி. படக்குழுவினர் மிகப்பெரிய மெனக்கெடலுடன், குறிப்பாக CG பணிகளில் அதிக உழைப்புடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் முதலில் படத்தைப் பார்த்து கொடுத்த ஆதரவும் பாராட்டும் எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. அதன் பின்னர் ரசிகர்களும் படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதலே நல்ல வரவேற்பு கிடைத்து, ஷோ பை ஷோ வசூல் அதிகரித்தது. தமிழ்நாடு முழுவதும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை உணர்ந்ததும் ஜிவி பிரகாஷ் சாருக்கு தொலைபேசியில் தெரிவித்து மகிழ்ந்தேன். அவருடன் இதுவரை…
Read MoreWILD TAMILNADU வைல்ட் தமிழ்நாடு விமர்சனம்..
WILD TAMILNADU என்ற ஆவணப்படத்தைச் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் பொதுமக்கள் காணலாம்.. இந்த ஆவண படத்திற்கு தன்னுடைய குரலை பதிவு செய்திருக்கிறார் நடிகர் அரவிந்தசாமி.. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் அவரது வாய்ஸ் அவர் இருந்தாலும் தமிழிலும் அவரது குரலே ஒலிக்கும் என தெரிவித்துள்ளனர்.. விரைவில் தமிழ் ஆவணப்படத்தையும் திரையில் காணலாம்.. இத்துடன் வைல்ட் தமிழ்நாடு போல தென்னிந்தியாவில் உள்ள கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வளங்களை இது போன்ற திரைப்படமாக வெளியிட உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.. இதில் வாழும் ஜீவராசிகள் அனைத்தையும் மக்களாகிய நாம் தான் பாதுகாக்க வேண்டும்.. வாயில்லாத ஜீவன்கள் என்று நாம் சில புழு பூச்சிகளை நினைத்தாலும் அதுதான் ஒரு காடு உருவாக காரணமாக இருக்கிறது..…
Read Moreஎண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’, ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு தளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்திய தரவரிசையின்படி, ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி முதலிடத்தை பிடித்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் நிலவும் மிகப்பெரிய வரவேற்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவும் ‘பிக் பாஸ் தமிழ்’ இருந்து வருகிறது. ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் பிரிவில் பிக் பாஸ் தமிழ் முதலிடத்தைப் பிடித்திருப்பது, தமிழ் மார்க்கெட்டில் மிகவும் வலுவான ரியாலிட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தொடர்ந்து வருவதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இந்த நிகழ்ச்சி நெருக்கமாக இருப்பதையும் இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெற்றி, பனிஜே ஏசியாவின் ஒரு பகுதியாக செயல்படும் எண்டெமோல்…
Read More
