ஆரம்பகால கோவிட் தொற்றுக் காலத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் குழுவொன்று, ஒரு மாணவர் விடுதிக்கு குடிபெயர்கிறது. பதினைந்து ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அந்தக் கட்டடம், அதற்கு முன் ஒரு மனநலக் காப்பகமாக இருந்தது. விவேக் சங்கர் எனும் மாணவன், அவ்விடுதியில், சீல் வைக்கப்பட்டதும் சபிக்கப்பட்டதுமான அறை எண் 418-க்கு அருகில் உள்ள 417 -க்குக் குடிபெயர்கிறான். அந்த ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் எவரும் நுழையக் கூடாது. அப்படி பெண்கள் யாரேனும் நுழைந்தால், 418 இலுள்ள அமானுஷ்ய சக்தி விழித்துக் கொள்ளும். ஏதோ அமானுஷ்யமாக உள்ளதே என உணரும் விவேக், அதைத் தெரிந்து கொள்ள 418 அறைக்குள் நுழையும் அதே சமயம், லண்டனில் இருந்து திரும்பிய கோவிட்டால் பாதிக்கப்பட்ட சாய்ஷா எனும் பெண் அந்த ஆண்கள் விடுதிக்குள் நுழைகிறார். அதனால் அசாதாரணமான பில்லி-சூனிய மர்ம சம்பவங்கள்…
Read MoreAuthor: reporter
ஹைக்கூ – விமர்சனம்
பெண்கள் கழிவறைக்குள் தெரியாமல் நுழைந்துவிடும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மனோவைக் கல்லூரியை விட்டு நீக்குகின்றனர். அதனால் இறுதியாண்டு படிக்க வேற கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இருபாலர் படிக்கும் கல்லூரியாக மாற்றம் பெறும் பெண்கள் கல்லூரியில், ஒரே ஒரு ஆண் மாணவனாகச் சேருகிறான் மனோ. கோவையிலுள்ள அக்கல்லூரியில், கொடி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறுகிறது. ஆனால், ஓவர் பொசஸிவாக இருக்கும் மனோவின் குணத்தால், அந்தக் காதல் முறிகிறது. கல்லூரி முடிந்து, மனோ சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அந்நிறுவனத்தில் சேரும் நிவி எனும் நிவேதாவுடன் மெல்ல காதல் மலருகிறது. நிவேதாவின் முன்னாள் காதலில், காதலனின் டாக்ஸிக்கான குணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார். மனோவோ, முந்தைய காதலில் தான் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என மெச்சூர்டாக மாறத் தொடங்கியிருப்பார். எனினும் அவர்களது காதலில்…
Read Moreசட்டமும் நீதியும் 2 – விமர்சனம்
இன்ஸ்பெக்டர் கனகவேல் தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை ரிப்போர்ட் அளிக்க, அது தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடுக்கிறார் கனகவேலின் மனைவி சந்திரா. கனகவேலுடன் ஸ்டேஷனில் பணி புரியும் நான்கு காவலர்கள் மேல் புகார் அளிக்கிறார் சந்திரா. குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் வாதாடக் கூடாதென பார் கவுன்சிலில் தீர்மானம் எட்டப்படுகிறது. ஏனென்றால் சந்திரா தான் பார் கவுன்சிலரின் தலைவர். குற்றவாளிக்குக் கூட வக்கீல் வைத்துக் கொள்ளும் உரிமையைச் சட்டம் அளித்து இருக்கும் பொழுது, ஒரு நிரபராதிக்காக வாதாட யாரையும் அனுமதிக்காதது எந்த வகையில் நியாயமாகும் என இப்ராஹிமின் மனைவி பானு, வக்கீல் சுந்தரபாண்டியனைக் கேட்கிறார். அக்கேள்வியின் கனம் உலுக்க, சுந்தரபாண்டியன் பார் கவுன்சிலை எதிர்த்து அவ்வழக்கை எடுத்துக் கொள்கிறார். சந்திரா, சி.பி.ஐ. விசாரணை கோர, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)…
Read MoreZion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார்.…
Read MoreZion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார்.…
Read Moreராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், ராமர் மற்றும் சீதையின் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகள் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறது. பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள், கம்பீரமான அரண்மனைப் பின்னணிகள், ராமர், சீதையின் திருமணக் காட்சிகள் எனப் பல அழகான தருணங்கள் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ‘மங்கள வண்ணமே’ பாடல் தற்போது வேர்ல்ட் ஆஃப் ராமாயணா மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடலைக் கேட்கலாம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அரண்மனையின் பிரம்மாண்டம், புனிதமான திருமண நிகழ்வுகள், அயோத்திக்கு வெளியே அவர்களது…
Read More*யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்டம் அக்டோபர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடு*
ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக…
Read Moreஎஸ்.ஏ. சந்திரசேகரனை சந்தித்து சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை பெற்றார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக, சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்தித்து, சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், பல்வேறு திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் பெற்றார். அப்பொழுது சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், தான் தலைவராக இருந்த போது சங்கத்தின் அதிகாரப்பூர்வ மாத இதழ் வெளிவந்தது, அதன் பின்னர் 13 வருடத்திற்கு பிறகு தொடர்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். சங்க வளர்ச்சிக்கும் உறுப்பினர்கள் நலனுக்கும் இந்த சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார். இது போன்ற முன்னாள் தலைவர்கள் ஆலோசனைகள் என்னை போன்று புதிய தலைமைக்கு, நிர்வாகத்தினை நடத்திடவும் மற்றும் திரைப்படத் துறைக்கு இன்னும் நிறைய புதிய திட்டங்கள் கொண்டுவர ஊக்குவிக்கும்…
Read More‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ட்ரீமிங் வெளியீட்டின் முதல் வாரத்திலேயே இப்படம் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் மனோரமாமேக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு, பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கியுள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவையையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டுள்ளது. சங்கீத் பிரதாப் அறிமுக நாயகனாக நடித்துள்ளார். இதில் ஷரஃபுதீன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோமா நிலையில் இருந்து மீண்டு வரும் ரூபின் (சங்கீத் பிரதாப்), தொலைவில் ஒலிக்கும் சத்தங்களையும் உரையாடல்களையும் கேட்கும் அபூர்வமான திறனைப் பெறுகிறார்.…
Read Moreஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
காதல், நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட மனதுக்கு இதமான காதல் கதைகள், தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களுக்கு விருப்பமான படங்களாக உள்ளன. அந்த வகையில், இன்று அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு, ஆரம்பகட்டப் பிரத்யேகக் காட்சிகளிலேயே கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பு, படத்தின் தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏற்கெனவே ‘ஜோ’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தையும், விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தையும் தயாரித்துள்ள இவர்கள், ‘ஹைக்கூ’ படத்தின் ஆரம்பகட்ட வரவேற்பால் உற்சாகமடைந்துள்ளனர். முதலில் திட்டமிடப்பட்டிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, ரசிகர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான கருத்துகளும் அதிகரித்த வரவேற்பும் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் பகிர்ந்து…
Read More