சண்டக்காரி – விமர்சனம்..

கதை… லண்டனில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார் ஸ்ரேயா.. அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் திறமையான விமல்.. ஸ்ரேயா ஒரு சண்டைக்காரி திமிரான பொண்ணு என ஊழியர்களே அவரை வெறுக்கும் நிலையில் விமல் அங்கு தாக்கு பிடித்து தன் பணியை செய்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் ஸ்ரேயாவின் விசா முடிவடையும் நிலையில் அவர் இந்தியா செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.. இதனால் விமலின் உதவி நாடுகிறார்.. அப்போது விமல் ஒரு நிபந்தனை விதிக்கிறார்… நீங்கள் உதவி செய்தால் நான் செய்வேன் என கண்டிஷன் போடுகிறார்.. யார் நிபந்தனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்.? ஜெயித்தது யார் என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்.. Vemal, Shriya saran, Punnagai poo Gheetha, Sathyan, Prabu, KR Vijaya, Rekha, Dhev khill, Uma padmanaban, Crane Manohar,…

Read More

நல்ல படம் – விமர்சனம்…

கதை… நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி.. குடி குடி என்று இருப்பவன் நாயகன்.. பார் நடத்தி வருபவர்.. இன்பம் துன்பம் எதுவென்றாலும் குடித்து தீர்ப்பவர் இவர்.. மது கடை விடுமுறை என்றாலும் ஏற்கனவே ஸ்டார்ட் எடுத்து வைத்து அதிலிருந்து குடித்துக் கொண்டிருப்பவர்.. ஆனாலும் இவரை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி.. அம்மா தங்கை காதலி யார் சொன்னாலும் குடியை விடாமல் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.. இந்த நிலையில் ஒருநாள் இந்தியா முழுக்க மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது.. அனைத்து மது கடைகளும் அடைக்கப்படுகிறது.. அப்போது குடிகாரர்கள் நிலை என்ன என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை நடிகர்கள்… நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி.. குடித்தால் என்ன பிரச்சனை.. குடிக்காவிட்டால் என்ன நன்மை என்பதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்… இயக்குனர் ஆனால்…

Read More

தி டார்க் ஹெவன் – விமர்சனம் 4. 25/5….

கதை… ஜூன் மாதம் என்றாலே தமிழகத்திற்கு டென்ஷன் தான்.. காரணம் வெயில் அதிகமாக இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் ஜூன் மாதம் வந்தாலும் அங்குள்ள மக்கள் அலறி துடிக்கிறார்கள்.. ஒவ்வொரு ஏழு வருடத்திற்கு ஒரு முறை வரும் ஜூன் மாதத்திற்கு அந்த ஸ்பெஷல் அலறல்.. மக்கள் அனைவரும் பயத்தில் உறைந்து கொண்டிருக்க அங்கு உள்ள காவல் நிலையத்திற்கு புதிதாக வருகிறார் காவல் அதிகாரி சித்து.. திடீரென ஒரு முக்கிய செய்தி வருகிறது.. கேரளாவில் இருந்து ஒரு சைக்கோ கொலைகாரன் தமிழக பகுதியில் வந்து விட்டான்.. அந்த சமயத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடக்க ஒரு கட்டத்தில் சித்துவின் மனைவியும் கொல்லப்படுகிறாள்.. நிஜமாலுமே சைக்கோ கொலைகாரன் தான் கொன்றானா? அல்லது இதில் பின்னணியில் வேறு ஒரு கொலைகாரன் இருக்கிறானா என்று தேடுதல் வேட்டை இறங்குகிறார் நாயகன் சித்து… அதன்…

Read More

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.…

Read More

இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!

எழுத்தாளராக அவதாரம் எடுத்த நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய ‘நான் ராமசாமி பேசுறேங்க’, ‘மகிழ்வித்து மகிழ்’ இரண்டு புத்தகங்களுக்கும் இயக்குநர் பேரரசு அவர்களிடம் அணிந்துரை பெற்றிருந்தார். இந்நிலையில் புத்தகத்தை இயக்குநர் பேரரசு அவர்களிடம் வழங்கி, வாழ்த்துக்கள் பெற்றார்! என் “நெஞ்சை தொட்டாயே..!” திரைப்படத்தில் கதாநாயகனாகவும், “திகிலோடு விளையாடு..!” திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இப்பொழுது எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். கௌசல்யா ரவி என்ற தன் மனைவியின் பெயரை புனைபெயராக கொண்டு, வார மற்றும் மாத இதழ்களில் பல சிறுகதைகள் எழுதி வந்தவர், முதல் முறையாக, “நான் ராமசாமி பேசுறேங்க..!” “மகிழ்வித்து மகிழ்..!” ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.  

Read More

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக இணையும் ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

சமையலறை தயாராகிவிட்டது… ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டன… சுவையான உணவுகளின் மணமும், பரபரப்பும் இனி தொடங்கவிருக்கிறது. மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) நிகழ்ச்சியின் வெற்றியாளரான செஃப் சாஷி செலியா, தற்போது செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் ( Celebrity MasterChef Tamil) நிகழ்ச்சியில் நடுவராக இணைந்துள்ளார். Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு பிரபலங்களை ஒன்றிணைத்து, உணவு, பொழுதுபோக்கு மற்றும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த சமையல் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார். சாஷி செலியாவின் மாஸ்டர்செஃப் பயணம் வழக்கமானதாக இருந்ததில்லை. தனது பணியை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவரது சமையலில், சிறுவயதில் அவரைச் சுற்றி வளர்ந்த இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு…

Read More

முதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் பிரச்சனைகளைப் பேசுவது போல ஆரம்பமாகிறது. காதலர்களின் உறவு, குடும்பத்தின் எதிர்ப்பு என இயல்பான காதல் கதைக்கான களத்துடன் நகரும் டிரெய்லர், பாதியில் திடீரென யூடர்ன் அடிக்கிறது. அதன்பிறகு, காதலர்கள் எதிர்பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வதும், அந்தப் பிரச்சனை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் முழுமையாக வெளிப்படுத்தாமல், அதிரடி…

Read More

சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் ( Silver Tree Studios) தயாரிக்கும் முதல் திரைப்படம் – ரஞ்சித் ஜெயக்கொடி (Ranjit Jeyakodi) இயக்கத்தில் உருவாகிறது!

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது. சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios) வழங்கும் – புரொடக்ஷன் no.1 (Production No.1), POP Entertainment நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது. மேலும் இப்படத்தில்…

Read More

டிஎன்பிபிஎல் இரண்டாவது சீசனில் ஊட்டி பைசன்ஸ் அணியுடன் விளையாட்டு அரங்கில் களமிறங்கும் கீதம்!

சென்னை, செப்டம்பர் 2026: தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டியில் பங்கேற்கும் ஊட்டி பைசன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஃபிரான்சைஸ் உரிமையாளராக, போட்டி விளையாட்டுத் துறையில் தனது பயணத்தைத் தொடங்குகிறது கீதம். நீலகிரி மலைப்பகுதியின் வேர்களையும், காட்டெருமையின் வலிமை மற்றும் விடாமுயற்சியையும் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 14 விளையாட்டு வீரர்களுடன் களமிறங்குகிறது. போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பதோடு, ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் தங்களுக்கென அடையாளத்தை உருவாக்குவதே இந்த அணியின் இலக்காகும். கீதத்தைப் பொறுத்தவரை, ஊட்டி பைசன்ஸ் அணி என்பது விருந்தோம்பல் துறைக்கு அப்பாற்பட்ட புதிய அத்தியாயமாகும். வளர்ந்து வரும் பிக்கிள்பால் விளையாட்டுக்கு பங்களிப்பதுடன் சமூகம், கலாச்சாரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு அணியை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இது அமைகிறது. “ஊட்டி பைசன்ஸ் அணி…

Read More

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. ‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், படக்குழு சிறப்பான புரமோஷன் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து கேட்கத் தூண்டும் பாடலாக மாறியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.…

Read More