தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா () விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம். நகைச்சுவை, குடும்ப உணர்வு, மனிதநேயம் என பல்வேறு அம்சங்களை அழகாக இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும்…
Read MoreAuthor: reporter
சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் ( Silver Tree Studios) தயாரிக்கும் முதல் திரைப்படம் – ரஞ்சித் ஜெயக்கொடி (Ranjit Jeyakodi) இயக்கத்தில் உருவாகிறது!
விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது. சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios) வழங்கும் – புரொடக்ஷன் no.1 (Production No.1), POP Entertainment நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது. மேலும் இப்படத்தில்…
Read More‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது. ‘World of Vettuvam’ வீடியோ, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் PAN Indian வெளியீட்டை முன்னிறுத்தும் வகையில், இந்தி பதிப்பிற்கு நடிகர் Pankaj Tripathi, தெலுங்கு பதிப்பிற்கு நடிகர் Rana Daggubati, மலையாள பதிப்பிற்கு நடிகர் Soubin Shahir, கன்னட பதிப்பிற்கு நடிகர் Kiccha Sudeep ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் குரல் கொடுத்துள்ளார். அபோகலிப்ஸ் பின்னணியில், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’, பல்வேறு குழுக்களுக்கிடையேயான போட்டி, மோதல்கள் மற்றும் அவற்றால் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக்…
Read Moreஅண்மையில் தங்கள் தயாரிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தைத் தொடர்ந்து புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படமாக ‘பிக்னிக்’ (Picnic) உருவாகிறது.
இந்தப் படத்தின் மூலம் ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் இணை எழுத்தாளராகப் பணிபுரிந்த கிரண் ஜோசி இயக்குநராக அறிமுகமாகிறார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சமீபத்தில் உலகளாவிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தினைத் தொடர்ந்து, முன்னணித் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோருடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இப்படம் 2027 ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களைத் தயாரிக்கும் பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய தனது அடுத்த திரைப்படமான ‘பிக்னிக்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி…
Read Moreசூப்பர் ஸ்டாரிடம் இருந்து வாழ்த்து வந்ததை மறக்கவே முடியாது! – ‘மண்டாடி’ வெற்றி விழாவில் சூரி நெகிழ்ச்சி!!
அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்ஷன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் எனப் பணியாற்றியிருந்தனர்.ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்திருந்தார். ‘மண்டாடி’ படத்தின் வெற்றி மகிழ்ச்சி பகிர்வுக் கொண்டாட்டம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வருகை தந்திருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி ஒளி படர்ந்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “ஒரு படத்தைப்…
Read Moreசண்டக்காரி – விமர்சனம்..
கதை… லண்டனில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார் ஸ்ரேயா.. அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் திறமையான விமல்.. ஸ்ரேயா ஒரு சண்டைக்காரி திமிரான பொண்ணு என ஊழியர்களே அவரை வெறுக்கும் நிலையில் விமல் அங்கு தாக்கு பிடித்து தன் பணியை செய்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் ஸ்ரேயாவின் விசா முடிவடையும் நிலையில் அவர் இந்தியா செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.. இதனால் விமலின் உதவி நாடுகிறார்.. அப்போது விமல் ஒரு நிபந்தனை விதிக்கிறார்… நீங்கள் உதவி செய்தால் நான் செய்வேன் என கண்டிஷன் போடுகிறார்.. யார் நிபந்தனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்.? ஜெயித்தது யார் என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்.. Vemal, Shriya saran, Punnagai poo Gheetha, Sathyan, Prabu, KR Vijaya, Rekha, Dhev khill, Uma padmanaban, Crane Manohar,…
Read Moreநல்ல படம் – விமர்சனம்…
கதை… நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி.. குடி குடி என்று இருப்பவன் நாயகன்.. பார் நடத்தி வருபவர்.. இன்பம் துன்பம் எதுவென்றாலும் குடித்து தீர்ப்பவர் இவர்.. மது கடை விடுமுறை என்றாலும் ஏற்கனவே ஸ்டார்ட் எடுத்து வைத்து அதிலிருந்து குடித்துக் கொண்டிருப்பவர்.. ஆனாலும் இவரை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி.. அம்மா தங்கை காதலி யார் சொன்னாலும் குடியை விடாமல் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.. இந்த நிலையில் ஒருநாள் இந்தியா முழுக்க மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது.. அனைத்து மது கடைகளும் அடைக்கப்படுகிறது.. அப்போது குடிகாரர்கள் நிலை என்ன என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை நடிகர்கள்… நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி.. குடித்தால் என்ன பிரச்சனை.. குடிக்காவிட்டால் என்ன நன்மை என்பதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்… இயக்குனர் ஆனால்…
Read Moreதி டார்க் ஹெவன் – விமர்சனம் 4. 25/5….
கதை… ஜூன் மாதம் என்றாலே தமிழகத்திற்கு டென்ஷன் தான்.. காரணம் வெயில் அதிகமாக இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் ஜூன் மாதம் வந்தாலும் அங்குள்ள மக்கள் அலறி துடிக்கிறார்கள்.. ஒவ்வொரு ஏழு வருடத்திற்கு ஒரு முறை வரும் ஜூன் மாதத்திற்கு அந்த ஸ்பெஷல் அலறல்.. மக்கள் அனைவரும் பயத்தில் உறைந்து கொண்டிருக்க அங்கு உள்ள காவல் நிலையத்திற்கு புதிதாக வருகிறார் காவல் அதிகாரி சித்து.. திடீரென ஒரு முக்கிய செய்தி வருகிறது.. கேரளாவில் இருந்து ஒரு சைக்கோ கொலைகாரன் தமிழக பகுதியில் வந்து விட்டான்.. அந்த சமயத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடக்க ஒரு கட்டத்தில் சித்துவின் மனைவியும் கொல்லப்படுகிறாள்.. நிஜமாலுமே சைக்கோ கொலைகாரன் தான் கொன்றானா? அல்லது இதில் பின்னணியில் வேறு ஒரு கொலைகாரன் இருக்கிறானா என்று தேடுதல் வேட்டை இறங்குகிறார் நாயகன் சித்து… அதன்…
Read More‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.…
Read Moreஇயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!
எழுத்தாளராக அவதாரம் எடுத்த நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய ‘நான் ராமசாமி பேசுறேங்க’, ‘மகிழ்வித்து மகிழ்’ இரண்டு புத்தகங்களுக்கும் இயக்குநர் பேரரசு அவர்களிடம் அணிந்துரை பெற்றிருந்தார். இந்நிலையில் புத்தகத்தை இயக்குநர் பேரரசு அவர்களிடம் வழங்கி, வாழ்த்துக்கள் பெற்றார்! என் “நெஞ்சை தொட்டாயே..!” திரைப்படத்தில் கதாநாயகனாகவும், “திகிலோடு விளையாடு..!” திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இப்பொழுது எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். கௌசல்யா ரவி என்ற தன் மனைவியின் பெயரை புனைபெயராக கொண்டு, வார மற்றும் மாத இதழ்களில் பல சிறுகதைகள் எழுதி வந்தவர், முதல் முறையாக, “நான் ராமசாமி பேசுறேங்க..!” “மகிழ்வித்து மகிழ்..!” ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
Read More
