இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது. பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது. சாதாரண விஷயங்கள்… செம கலாட்டா! நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே சாதாரணமானவைதான். ஆனால் சரியான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக திரும்பும்போது… அந்தச் சாதாரண விஷயங்களே செம கலாட்டாவாக மாறிவிடும்! அப்படிப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு, நட்பு, காதல், குடும்ப உறவுகள், misunderstanding, comedy என ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணையும் கதையாக இப்படம் உருவாகிறது. சிரிப்புக்கு நடுவே…
Read MoreAuthor: reporter
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்ற…
Read More”நடிகர் கமல்ஹாசனை போல இருப்பது எனக்கு பலம்”- நடிகர் கார்த்திகேயன்!
‘டீ கே’ (Dee Kay) எனப் பிரபலமாக அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி, தற்போது திரையுலகிலும் குறிப்பிடத்தக்க பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ போன்ற தொடர்களின் மூலமும் ஓடிடி தளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் கார்த்திகேயன். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ தொடரில் நடித்து பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு மேலும் பரிச்சியமானார். கார்த்திகேயனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனைகள், ஸ்டைல் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் ஆகியவை இளம் வயது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக பலரும் கூறுகின்றனர். இதை கார்த்திகேயன் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறார். அதிலும், கமல்ஹாசன் தனது விருப்பமான கதாநாயகன் மட்டுமல்லாமல், தனது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனும் கூட என்கிறார். கமல்ஹாசனின் படங்களில் ‘அன்பே சிவம்’ திரைப்படம் கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வழக்கமான ஹீரோயிசத்தைத்…
Read More200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்!!
மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும்…
Read Moreஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!
இயக்குநர் முருகு, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார். தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறும் முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது. இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும்…
Read Moreஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!
*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.* அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது.., “ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என்…
Read More”நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பரதநாட்டியம். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், கேமரா முன் தனது தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டார். வர்ஷினிக்கு இந்தி சினிமா மீது தனி ஈர்ப்பு உண்டு. கேமராவுக்காக வெறுமனே நடிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களை தங்கள் திறமையான நடிப்பு மூலம் உயிர்ப்பிக்கும் தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா போன்ற நடிகைகள் தனக்கு முன்மாதிரியானவர்கள் என்கிறார். இந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும்…
Read Moreஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இவ்விழாவினில் திரைத்துறையிலிருந்து தயாரிப்பாளர் Fivestar கதிரேசன், Drumsticks Productions தயாரிப்பாளர் விவேக், Shanthi Talkies தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் H வினோத், நடிகர் நட்டி ஆகியோர், Stone Bench தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர். ஃபேமிலி ரோம் காம் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம்,…
Read Moreமுருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக வரக்கூடிய ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ‘ பக்திப்பாடல்!
முதல் முதலாக உலகில் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு பாடல் உருவாகி உள்ளது. அதுதான் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ‘ பக்திப் பாடல். இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான திவோ மியூசிக் (divo Music) நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் பாடலை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே. கோபி உருவாக்கியுள்ளார்.இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறி ‘முருகனருட்செல்வர்’ என்ற சிறப்புடன் பக்தி மார்க்கத்தில் செயல்பட்டு வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு முருக பக்தராக ,முருகன் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இப்போது உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களுக்காக தனது ஆராய்ச்சியின் விளைவாக மலர்ந்த அந்த முருகர் ஆராய்ச்சிப் பாடலை உருவாக்கி உள்ளார். அந்தப்…
Read Moreஅகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் ‘இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு’ என்றார் அகில இந்திய தலைவர் முத்துத்துரை! அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அகில இந்திய தலைவர் முத்துத்துரை, 1000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். இதுவரை, ஆன்லைனில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதில் 7 லட்சம் ஆண்கள். 3 லட்சம் பெண்கள் என்ற தகவலையும் தெரிவித்தார். தையல் மிஷின், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என லெஜன்ட் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் நிறைய நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம். எங்களின் இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. தொடர்ந்து நலிந்தோருக்கு உதவுவது என்று அகில இந்திய லெஜன்ட் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முத்துத்துரை கூறினார். இன்று நடைப்பெற்ற மகளிர் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர். விழாவில், லெஜன்ட் சரவணன் அவர்களுக்கென்று, ரசிகர்களால் உருவாக்கப்பட்ட தனி பாடல் ஒன்று, ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்டது. இறுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது!
அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் ‘இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு’ என்றார் அகில இந்திய தலைவர் முத்துத்துரை! அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அகில இந்திய தலைவர் முத்துத்துரை, 1000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். இதுவரை, ஆன்லைனில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதில் 7 லட்சம் ஆண்கள். 3 லட்சம் பெண்கள் என்ற தகவலையும் தெரிவித்தார். தையல் மிஷின், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என லெஜன்ட் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் நிறைய நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம். எங்களின் இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. தொடர்ந்து நலிந்தோருக்கு உதவுவது என்று அகில இந்திய லெஜன்ட் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முத்துத்துரை…
Read More
