தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தை

தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தை. தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தைவசப்படுத்தும் சுவர் ஓவியங்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மூலம் தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தையை அமேசான் பிரைம் வீடியோ பரப்புகிறது* ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மாறாவை பிரமோத் பிலிம்ஸ் பேனரில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்க, திலீப் குமார் இயக்கியுள்ளார். ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய தமிழ் வெளியீடான மாறா, வெளியான சில மணி நேரங்களிலேயே உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடமிருந்து மிகவும் உற்சாகமூட்டும் விமர்சனங்களைப் பெற்றது. ஓவியங்கள், அழகிய இடங்கள் மற்றும் வசீகரிக்கும் கதைகள் நிறைந்த ஒரு மாயாஜால உலகிற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, எல்லோரும் விரும்பும் நன்னம்பிக்கை மற்றும் நலனைப் பேணும் திரைப்படமாக…

Read More

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்   இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றப் படம் அண்ணனுக்கு ஜே. இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார், ஒரு தாய் மக்கள் என்ற ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை மையப் படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம். தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் இடங்களில் எல்லாம் படக்குழுவினர் களமிறங்கி, மாடு பிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்து இருக்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும்…

Read More

நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “

நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “. நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “ அவரே பாடல்வரிகளை எழுதி, இசையமைத்து, பாடி, நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். நடிகர் மன்சூரலிகான் 1994 ஆம் ஆண்டே சில்க் சிமிதாவை வைத்து “ சிக்குச்சான் சிக்குச்சான் சிக்குசிக்குச்சான் “ என்ற இசை ஆல்பத்தை ஏழு தெம்மாங்கு பாடல்களை கொண்டு தயாரித்து வெளியிட்டிருந்தார் அந்த பாடல்கள் அப்போதே மக்கள் மத்தியில் பிரபலமானது. அதுமட்டுமல்லாது அவர் நடித்த “ ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜ மார்த்தாண்ட…

Read More

Director G.N.Rangarajan’ s 90th Birthday

Director G.N.Rangarajan’ s 90th Birthday.       திரை உலகம் போற்றும் படைப்பாளி, GN.ரங்கராஜன் அவரகளின் 90 வது பிறந்த நாள் விழா ! திரை உலகில் சில பெயர்கள், அவர்களின் நினைவுகள், எத்தனை காலம் கடந்தாலும், அவர்களின் பிரபல்யம், திரைக்காதலர்கள் மனதிலிருந்து அழியவே அழியாது. அப்படியான புகழ் கொண்டவர்களில் ஒருவர் தான், படைப்பாளி GN. ரங்கராஜன். அவரது அசாத்தியமான திரைப்பயணம் இன்றைய படைப்பாளிகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள், அவரது மகன் GNR குமரவேலன் உட்பட, பலருக்கும் பெரும் தூண்டுகோலாக இருந்து வருகிறது. 2020 டிசம்பர் 17 அந்த வரலாற்று நாயகனின் பிறந்தநாள். அவரது நினைவுகள், அவர் தந்த அற்புதமான அறிவுரைகள் பற்றி, அவரது அன்பு மகன் GNR குமரவேலன் பகிர்ந்துகொண்டதாவது… அளவில்லாத தொழிநுட்ப அறிவை போதித்ததை தாண்டி என்னிடம் அவர் எப்போதும்…

Read More

*ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை*

*ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை*     *ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை* சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன்…

Read More

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர்

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர்.   நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்‌ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – ரமேஷ் இசை – விக்ரம் வர்மா படத்தொகுப்பு – பிரபா கலை – மாய பாண்டி மற்ற நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Read More

” Security ”  fetched 5 Awards

” Security ”  fetched 5 Awards   SOUTH FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA..”செக்யூரிட்டி “குறும் படம் சிறந்த படம் ,சிறந்த நடிகர் ,சிறந்த படத்தொகுப்பாளர் ,சிறந்த நடிகை ,சிறந்த இசையமைப்பாளர் என 5 விருதுகளை வென்றுள்ளது…இதற்கு முன் PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL ,COSMO FILM FESTIVAL, ANATOLIAN SHORT FILM FESTIVAL, CAPRI SHORT FILM FESTIVAL போன்றவற்றில் சிறந்த குறும்படமாக பல நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் “செக்யூரிட்டி” சிறந்த குறும்படமாக வென்றுள்ளது.. நடிகர் உதயா முதன்முறையாக இயக்குனராகி 65 வயது முதியவராக நடித்துள்ளார்…இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக இக்குறும்படம் அமைந்துள்ளது..திரையுலக பிரமுகர்கள்,அரசியல் பிரமுகர்கள்,பத்திரிகை, ஊடக நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் குறும்படத்தை மிகவும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது…தெலுங்கு ,மலையாளம் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்து… விரைவில்…

Read More

அமைச்சர் ஜெயக்குமார் இதுக்கு முன்னாடி என்னவா இருந்தாரு?

அமைச்சர் ஜெயக்குமார் இதுக்கு முன்னாடி என்னவா இருந்தாரு? அமைச்சர் ஜெயக்குமார் இதுக்கு முன்னாடி என்னவா இருந்தாரு? குழப்பத்தில் மக்கள்! கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சென்னை ராயபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இதில் மக்கள் பணியில் தன்னை அதிகமாய் இணைத்துக் கொண்டு களத்தில் நின்ற அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிறப்பு விருது கொடுக்கப்பட்டது. அவருக்கு நினைவுப் பரிசாக வீரவாள் ஒன்றும் கொடுக்கப்பட்டது.வழக்கமாக வாளை பரிசாக பெற்றுக் கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் அதை கையில் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா? வாளை கையில் வாங்கியவுடன் அதை வேகமாக சுழற்றி சுழற்றி தன் வித்தையை காட்டத் துவங்கிவிட்டார் அமைச்சர். பார்த்தவர்கள் அனைவரும் பிரமிப்பில் உறைந்து போனார்கள். இவருக்கு எப்படி வாள் வீசத்…

Read More

புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்”!

இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்” .காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன். இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்ற காட்சிகளை பல…

Read More

ஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்!

‘மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப் படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் “ஜீவி” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை  குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, “ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக,…

Read More