ஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்!

‘மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப் படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் “ஜீவி” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை  குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, “ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த  உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன  என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம், இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்” என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எம்.வெள்ளபாண்டியன் படத்தின் வெளியீட்டு தேதியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார். சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), பிரவீன் குமார் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல். (படத்தொகுப்பு), வைரபாலன் (கலை) மற்றும் ஐ.பி.கார்த்திகேயன் (லைன் புரொடுயூசர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணிபுரிய, பாபு தமிழ் கதை, திரைக்கதை எழுத வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.

Related posts

Leave a Comment