‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ’ஜூடோபியா’ திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திலும் எந்தெந்த தமிழ் சினிமா நடிகர்கள் பொருந்திப் போவார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா: ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நிலையான உறுதிப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றை மிகச்சரியாக தன் நடிப்பில் பிரதிபலிப்பதில் திறமையானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா கதைப்படி ஜூடி தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்பட்டாலும், ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த ஒரு எளிய பெண். புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் வலிமையான உணர்வுகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. ஜூடியாக அவரது வெர்ஷன் மிகவும் தீவிரமானதாகவும், நம்பிக்கையுடன் தனது கனவு…
Read MoreCategory: சினிமா செய்திகள்
இரவின் விழிகள் – திரை விமர்சனம்
யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பிரபலமாகத் துடிக்கும் சிலர், அதில் தங்களை முன்னிறுத்த எந்த எல்லைக்கும் போய் விடுகிறார்கள். இதில் பெண்கள் தொடர்பான பாலியல் வக்கிரங்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக தன்மானம் இழக்கும் பெண்களின் சிலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் உண்டு அப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு மேலோகம் அனுப்புகிறார் ஒருவர். அவர் யார் ? இவர்களால் அவர் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டார் என்பதை திகிலும் திடுக்கிடலுமாக சொல்வதே இந்த ‘இரவின் விழிகள்’. கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் வருகிறார். மஹேந்திரன். அறிமுக நாயகன் என்ற சுவடு இல்லாமல் இயல்பான நடிப்பில் காட்சிகளில் கடந்து போகிறார். நாயகியாக நடித்திருக்கும் நீமா ராய் உயிருக்கு பயப்படும் காட்சிகளில் யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்,…
Read Moreதிடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!
மும்பை, நவம்பர் 20, 2025:உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை ‘ஸ்டீபன்’ தர இருக்கிறது. தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ‘ஸ்டீபன்’ இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர்…
Read More“லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் பெரியாரிஸ்ட் சுப. வீரபாண்டியன்.
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளால் பெரிதும் பாராட்டைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக திரு.சுப. வீரபாண்டியன் நடிக்கிறார். இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறியதாவது: தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு தான் இந்த “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”. இந்தக் கொலை வழக்கு பற்றிப் பல ஆராய்ச்சிகளைத் தழுவியே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தக் கொலை வழக்கின் உண்மைச் சம்பவங்கள், இதற்கு பின்னால் அமைந்திருக்கும் மர்மங்களைப் பற்றி இன்னும் உண்மைத்தன்மையுடன் கொண்டு வருவதற்காக ஐயா சுப. வீரபாண்டியன் அவர்களும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.…
Read Moreதனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார். அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார். இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில்…
Read Moreதமிழ்நாட்டின் புதிய பொழுதுபோக்கு சகாப்தமான வொண்டர்லா சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று திறக்கப்படுகிறது!
தமிழ்நாட்டில், வொண்டர்லா சென்னையில் இந்தியாவின் முதல் பொலிகர் & மாபில்லார்ட் (பி & எம்) இன்வெர்ட்டட் கோஸ்டர் ‘தஞ்சோரா’ மற்றும் தனித்துவமான உயர்த்தப்பட்ட ஸ்கை ரெயில் என இவை அனைத்தும் அறிமுகமாகிறது. சென்னை, 19, நவம்பர் 2025: இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமான வொண்டர்லா ஹாலிடேஸ், அதன் ஐந்தாவது பெரிய திட்டமான வொண்டர்லா சென்னை அறிமுகத்தை இன்று அறிவித்தது. இது இந்திய குடும்பங்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழா. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் (தற்போது 37 ஏக்கர் பரப்பளவு) இது உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ரூ. 611 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட வொண்டர்லா சென்னை, எதிர்கால புதுமை மற்றும் பண்டைய தமிழ் கட்டிடக்கலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்ற முக்கிய பிரமுகர்கள் டிசம்பர் 1,…
Read More‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா. தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று இது வரை 1.7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்திற்கு தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளது. இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த திறமை…
Read Moreநந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது. அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ…
Read Moreஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் ‘கொம்புசீவி’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர். கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான “அம்மா என் தங்ககனி, நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்” என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் ‘கொம்புசீவி’ படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம்,…
Read Moreசக்திவேல் நாகப்பன் (எ) சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடிக்கும் ” ரா ட் ட ” திரைப்படம் வருகிறது!
இந்த படத்தில் அரசியல் பேசல.. ஆன்மீகம் பேசல … ஜாதி மதம் பேசல … வன்முறை பேசல… மது போதை பீடி சிகரெட் கலாச்சார சீர் கேட்ட பேசல… சண்டை சச்சரவை பேசல… டிஜிட்டல் பேசல… கைப்பேசி காட்டல… போலீஸ் அடிதடி பேசல.. துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் பேசல… ரத்தம் தெறிக்கல… கொலை கொள்ளை கற்பழிப்பு பேசல…. ஆனால்… வாழ்வியலை நயம்பட பேசி தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான திரைக்கதையில் காட்டும் திரைப்படம்தான் * “ராட்ட ” இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறும் பொழுது நான் பேசல… எங்களின் படம் பேசும்… என்றும் மேல் கண்ட எந்தவித தவறான பழக்கவழக்கங்களை காட்டாத இத் திரைப்படத்தை மக்கள் ஆதரவு தர வேண்டும். திரை ரசிகர்களும் மக்களும் ரசித்து கைதட்டி ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை…
Read More